கேப்டவுன்: தென் ஆப்பிரிக்காவின் ஏபிடி வில்லியர்சை ஒரு அதிரடி பேட்ஸ்மேனாகத்தான் பலருக்கும் தெரிந்திருக்கும். ஆனால் அவர் சகலகலா வல்லவன் என்பது பலருக்கும் தெரிந்திருக்காது.
டிவில்லியர்ஸ் இதற்கு முன்பு புரிந்த பல சாதனைகள் பற்றி பலரும் அறிந்திருந்திராத பத்து தகவல்கள் இதோ:

* தேசிய ஜூனியர் ஹாக்கி அணியின் கோல் கீப்பர்.
* தேசிய ஜூனியர் கால்பந்தாட்ட அணிக்காக ஆடுவதற்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்
* தேசிய ஜூனியர் ரக்ஃபி அணி கேப்டன்
* பள்ளிகள் அளவிலான நீச்சல் போட்டிகளில், 6 முறை சாதனை செய்தவர்.
* தென் ஆப்பிரிக்கா ஜூனியர் 100 மீட்டர் ஓட்டப்போட்டியில் அதிவிரைவு ஓட்டக்காரர்.
* தென் ஆப்பிரிக்க ஜூனியர் டேவிஸ் கப் டென்னிஸ் அணியில் இடம் பிடித்தவர்.
* 19 வயதுக்குட்பட்ட பேட்மின்டன் அணியின் தேசிய சாம்பியன்
* 19 வயதுக்குட்பட்டோருக்கான கோல்ஃப் போட்டித்தொடரில் பங்கேற்று வென்றுள்ளார்.
* கேப்டவுன் நகரில் செயல்படும் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான அமைப்பை உருவாக்கியவரும், தலைமை நன்கொடையாளரும் இவர்தான். கேன்சர் ஆஸ்பத்திரியையும் நடத்தி வருகிறார். ஜிம்பாப்வே ஒரு கிராமத்தை தத்தெடுத்து செலவிட்டுள்ளார்
* பயோகெமிக்கல் சயின்ஸ் திட்டத்திற்காக, நெல்சன் மண்டேலாவிடம் தேசிய விருது பெற்றவர் டிவில்லியர்ஸ்.