Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்திய கிரிக்கெட் அணியின் பங்காளதேஷ் டூரும், பல சுவாரசியங்களும்!

டாக்கா: இந்தியா-வங்கதேசம் அணிகள் இடையே வரும் 10ம் தேதி டெஸ்ட் போட்டி நடைபெறுகிறது. இதற்கான இந்திய அணி ஏற்கனவே வங்கதேச தலைநகர் டாக்கா சென்று சேர்ந்துள்ளது. கோஹ்லி தலைமையிலான இந்திய அணி இளம் வீரர்களை உள்ளடக்கியது. நீண்ட இடைவேளிக்கு பிறகு இந்தியா டெஸ்ட் போட்டியில் ஆட உள்ளது. இந்த டெஸ்ட் தொடர் குறித்த சுவாரசிய தகவல்கள் சிலவற்றை பார்க்கலாம்.

7 டெஸ்டுகள்

7 டெஸ்டுகள்

இந்தியா-வங்கதேச அணிகள் 2000வது ஆண்டில் இருந்து இதுவரை 7 டெஸ்ட் போட்டிகளில் மோதியுள்ளன. வரும் 10ம் தேதி, பதுல்லாவில் இவ்விரு அணிகள் நடுவே டெஸ்ட் போட்டி நடைபெறுகிறது. முன்னதாக, பதுல்லாவில் 2006ல் ஒரே ஒரு டெஸ்ட் போட்டி மட்டுமே நடந்துள்ளது. ஆஸ்திரேலியா-வங்கதேசம் அணிகள் நடுவே, நடந்த அந்த டெஸ்டில் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸி. அணி வென்றது.

தோற்றதில்லை

தோற்றதில்லை

இதுவரை மோதிய 7 டெஸ்டுகளில் ஆறில் இந்தியா வென்றது. ஒரு டெஸ்ட் டிரா ஆனது. எனவே, வங்கதேசத்துடன் டெஸ்ட் போட்டியில் தோற்றதில்லை என்ற பெருமையை இந்தியா தக்க வைத்துள்ளது.

கோஹ்லிக்கு முதல்முறை

கோஹ்லிக்கு முதல்முறை

விராட் கோஹ்லி முதல்முறையாக, கேப்டனாக பொறுப்பேற்று இந்தியாவை வழிநடத்தும் டெஸ்ட் போட்டி இதுவாகும். வங்கதேசத்துக்கு எதிராக முதல்முறையாக டெஸ்ட் போட்டியிலும் இப்போதுதான் கோஹ்லி ஆட உள்ளார். இதுவரை 33 டெஸ்ட் போட்டிகளில் கோஹ்லி ஆடியிருந்தாலும், வங்கதேசத்துடன் இதுவரை அவர் ஆடியதில்லை.

அனுபவ வீரர்கள்

அனுபவ வீரர்கள்

தற்போதுள்ள இந்திய அணியிலுள்ள முரளி விஜய், ஹர்பஜன்சிங் மற்றும் இஷாந்த் ஷர்மா ஆகியோர் மட்டுமே இதற்கு முன்பு வங்கதேசத்துக்கு எதிராக டெஸ்ட் போட்டிகளில் ஆடிய அனுபவம் உள்ளவர்கள்.

ஹர்பஜன்சிங்

ஹர்பஜன்சிங்

இரு அணியிலுள்ள வீரர்களிலும், அதிக டெஸ்ட் ஆடிய வீரர் ஹர்பஜன்சிங்தான். அவர் 101 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ளார். 2 வருடங்களுக்கு பிறகு ஹர்பஜன் இந்திய அணியில் சேர்க்கப்பட்டு்ள்ள நிலையில் அவர் வங்கதேசத்தை வறுத்தெடுப்பார் என எதிர்பார்க்கலாம்.

மேஸ்திரியாகும் சாஸ்திரி

மேஸ்திரியாகும் சாஸ்திரி

இந்திய முன்னாள் கேப்டன் ரவி சாஸ்திரி இந்திய அணியின் இயக்குநராகவும், பயிற்சியாளராகவும் இந்த தொடரில் பணியாற்ற உள்ளார். அவரும், வங்கதேசத்துக்கு ஏற்கனவே சென்றடைந்துள்ளார். பிளெட்சர் பதவிக்காலம் முடிந்ததை தொடர்ந்து பயிற்சியாளராகியுள்ளார் ரவி சாஸ்திரி.

சச்சின் சாதனை

சச்சின் சாதனை

இரு அணிகள் நடுவே சச்சின் அதிக சதம் அடித்த வீரர். 9 இன்னிங்சுகளில் 5 சதங்கள் விளாசியுள்ளார் சச்சின். அதில் 248 ரன்கள் அடித்து அவுட் ஆகாமல் இருந்தது பெஸ்ட் ஆகும். இரு அணி வீரர்களிலும் 820 ரன்கள் விளாசிய சச்சின் முதலிடத்திலும், 560 ரன்களுடன் ராகுல் டிராவிட் 2வது இடத்திலும் உள்ளனர்.

ஜாகீர் அசத்தல்

ஜாகீர் அசத்தல்

14 இன்னிங்சுகளில் 31 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்தியாவின் ஜாகீர் கான் முதலிடத்திலுள்ளார். இர்பான் பதான் 4 இன்னிங்சுகளில் 18 விக்கெட்டுகளை வீழ்த்தி 2வது இடத்திலுள்ளார்.

Story first published: Monday, June 8, 2015, 15:57 [IST]
Other articles published on Jun 8, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+