Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உலகக் கோப்பை: இந்தியா-பாக் இடையேயான போட்டி பற்றிய 10 சுவாரஸ்யங்கள்

மெல்போர்ன்: உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் நாளை மறுநாள் தான் முக்கியமான போட்டி நடக்க உள்ளது.

உலகக் கோப்பை போட்டிகள் நாளை தொடங்கி மார்ச் 29ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி ஆஸ்திரேலியாவின் அடிலெய்ட் நகரில் உள்ள ஓவல் மைதானத்தில் நாளை மறுநாள் நடைபெறுகிறது. உலகக் கோப்பை போட்டிகளில் இதுவரை 5 முறை இந்தியாவும், பாகிஸ்தானும் மோதியுள்ளது. அந்த 5 முறையும் இந்தியா தான் வெற்றி பெற்றுள்ளது.

இந்நிலையில் இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போட்டி குறித்து சில தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள்,

சச்சின்

சச்சின்

இந்திய அணி முதல் முறையாக சச்சின் டெண்டுல்கர் இல்லாமல் உலகக் கோப்பை போட்டியில் பாகிஸ்தானுடன் மோத உள்ளது.

வீரர்கள்

வீரர்கள்

உலகக் கோப்பை போட்டிகளில் பாகிஸ்தானை எதிர்த்து விளையாடிய அனுபவம் உள்ள இந்திய அணி வீரர்கள் டோணி, கோஹ்லி மற்றும் சுரேஷ் ரெய்னா தான். அந்த 3 பேரை தவிர மற்றவர்கள் தற்போது தான் முதல்முறையாக உலகக் கோப்பை போட்டிகளில் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாட உள்ளனர்.

பாகிஸ்தான்

பாகிஸ்தான்

பாகிஸ்தான் அணியில் மிஸ்பா உல் ஹக் (2011), முன்னாள் கேப்டன் ஷாஹித் அப்ரிதி (99, 2003, 2011), யூனுஸ் கான் (03, 11), உமர் அக்மல் (2011), வஹாப் ரியாஸ் (2011) ஆகியோர் உலகக் கோப்பை போட்டிகளில் ஏற்கனவே இந்தியாவுக்கு எதிராக விளையாடியுள்ளனர்.

அவுட்

அவுட்

உலகக் கோப்பை போட்டியில் பாகிஸ்தான் ஒரு முறை கூட இந்தியாவை ஆல் அவுட் ஆக்கியது இல்லை. ஆனால் இந்திய அணி பாகிஸ்தான் அணியை 1992, 1999 மற்றும் 2011 ஆகிய ஆண்டுகளில் ஆல் அவுட் ஆக்கியுள்ளது.

சதம்

சதம்

உலகக் கோப்பை போட்டியில் ஒரு இந்திய வீரர் கூட பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் சதம் அடித்தது இல்லை. அதிகபட்சமாக 2003ம் ஆண்டு சச்சின் 98 ரன்கள் எடுத்தார்.

சயீத் அன்வர்

சயீத் அன்வர்

இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போட்டியில் இதுவரை ஒரேயொரு சதம் தான் அடிக்கப்பட்டுள்ளது. 2003ம் ஆண்டு நடந்த போட்டியில் பாகிஸ்தானின் சயீத் அன்வர் 101 ரன்கள் எடுத்தார்.

முதல் போட்டி

முதல் போட்டி

1992ம் ஆண்டு மார்ச் 4ம் தேதி சிட்னி மைதானத்தில் தான் முதல்முறையாக இந்தியா-பாகிஸ்தான் இடையேயான உலகக் கோப்பை போட்டி நடைபெற்றது. அதன் பிறகு பெங்களூர்(96), மான்செஸ்டர்(99), சென்ச்சுரியன்(03), மொஹாலியில்(11) நடைபெற்றது.

டிக்கெட்

டிக்கெட்

நாளை மறுநாள் நடக்க உள்ள போட்டிக்கான டிக்கெட்டுகள் 20 நிமிடங்களில் விற்றுத் தீர்ந்தது.

டெண்டுல்கர்

டெண்டுல்கர்

இந்தியா-பாகிஸ்தான் இடையேயான உலகக் கோப்பை போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்தவர் சச்சின் தான். அவர் 5 இன்னிங்ஸில் 313 ரன்கள் எடுத்தார். உலகக் கோப்பை வரலாற்றில் பாகிஸ்தானுக்கு எதிராக அதிக ரன் எடுத்தவர் சச்சின் தான்.

வெங்கடேஷ் பிரசாத்

வெங்கடேஷ் பிரசாத்

வெங்கடேஷ் பிரசாத் தான் இந்தியா-பாகிஸ்தான் இடையேயான உலகக் கோப்பை போட்டிகளில் அதிகபட்சமாக 2 இன்னிங்ஸில் 8 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.

Story first published: Friday, February 13, 2015, 16:53 [IST]
Other articles published on Feb 13, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+