Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உலக கோப்பை டி20: இந்தியா-பாகிஸ்தான் மோதல் பற்றிய சுவாரசிய தகவல்கள்

கொல்கத்தா: உலக கோப்பை டி20 போட்டியில் நாளை மறுநாள், பரம வைரிகளான, இந்தியாவும் பாகிஸ்தானும், கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் பலப் பரிட்சை நடத்த உள்ளன.

உலக கோப்பை இறுதி போட்டியைவிட அதிகப்படியான, எதிர்பார்ப்பு இந்த போட்டிக்கு உருவாகியுள்ளது. பாகிஸ்தானைவிடவும், இந்தியா அதிக நெருக்கடிக்கு மத்தியில் இப்போட்டியை எதிர்கொள்கிறது. காரணம், முதல் போட்டியில் நியூசிலாந்திடம் தோற்றது.

இந்நிலையில், இந்தியா-பாகிஸ்தான் போட்டி குறித்த சில சுவாரசிய தகவல்கள் இதோ:

முதல் டி20

முதல் டி20

இந்தியாவின் நம்பர்-1 மைதானம் என்ற புகழுக்கு சொந்தமான கொல்கத்தா ஈடன் கார்டனில், இப்போதுதான் முதல் முறையாக இந்தியா-பாகிஸ்தான் டி20 போட்டியொன்றில் சந்திக்க உள்ளது.

பாகிஸ்தான் பலம்

பாகிஸ்தான் பலம்

ஈடன் கார்டனில் இதற்கு முன்பு நடைபெற்ற ஒருநாள் போட்டிகளில் ஒன்றில் கூட இந்தியாவிடம் பாகிஸ்தான் தோற்றது கிடையாது. மொத்தம் 4 போட்டிகளில் இவ்விரு அணிகளும் மோதியுள்ளன.

வங்கதேசத்தையும் தோற்கடித்தது

வங்கதேசத்தையும் தோற்கடித்தது

கொல்கத்தாவில் நடைபெற்ற வங்கதேசத்துக்கு எதிரான டி20 போட்டியில் போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது. இதன் மூலம் அந்த மைதானத்தில் பாகிஸ்தான் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்ற சாதனையை படைத்துள்ளது.

பாதுகாப்பு

பாதுகாப்பு

இந்த போட்டி முதலில் தர்மசாலாவில் நடத்துவதாக திட்டமிடப்பட்டு, பாதுகாப்பு காரணங்களால் கொல்கத்தாவுக்கு மாற்றப்பட்டது. இங்கு போதிய பாதுகாப்பு வழங்கப்படும் என்று மே.வங்க அரசு தெரிவித்துள்ளது.

வெற்றி வேண்டும்

வெற்றி வேண்டும்

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றேயாக வேண்டிய கட்டாயத்தில் இந்தியா களமிறங்குகிறது. இதில் வெற்றி பெற்றால்தான், அரையிறுதி செல்லும் வாய்ப்பை இந்தியா தக்க வைத்துக்கொள்ள முடியும்.

டி20 கிங் இந்தியா

டி20 கிங் இந்தியா

இதுவரை இந்தியாவும், பாகிஸ்தானும் 7 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளன. அதில் இந்தியா ஒரு போட்டியில் மட்டும் (2012-பெங்களூர்) தோற்றுள்ளது. மற்ற போட்டிகளில் இந்தியா வென்றுள்ளது.

டோணிதான் எப்பவும் தல

டோணிதான் எப்பவும் தல

பாகிஸ்தானுக்கு எதிராக மோதிய கடந்த 7 போட்டிகளிலும் இந்தியாவின் கேப்டன் மகேந்திர சிங் டோணியாகும். டோணி தலைமையிலான அணிதான் இப்போதும் பாகிஸ்தானை எதிர்கொள்ள உள்ளது.

பல கேப்டன்கள்

பல கேப்டன்கள்

பாகிஸ்தான் அணியோ இதுவரை 3 வெவ்வேறு கேப்டன்கள் தலைமையில் டி20 போட்டிகளில் இந்தியாவை எதிர்கொண்டுளளது. முகமது ஹபீஸ்-4 போட்டிகளுக்கும், சோயிப் மாலிக்-2 போட்டிகளுக்கும், அப்ரிடி 1 போட்டிக்கும், தலைமை வகித்துள்ளனர்.

சீனியர்கள்

சீனியர்கள்

தற்போதைய அணியில் டோணி, ரோகித் ஷர்மா, ஹர்பஜன்சிங், யுவராஜ் சிங், ஹபீஸ், அப்ரிடி, சோயிப் மாலிக் ஆகியோர் 2007 டி20 உலக கோப்பை இறுதி போட்டியில் விளையாடிய இரு அணி வீரர்களாகும்.

இந்தியா ஆதிக்கம்

இந்தியா ஆதிக்கம்

உலக கோப்பை டி20 வரலாற்றில் இதுவரை இந்தியாவை பாகிஸ்தான் தோற்கடித்தது இல்லை. இதுவரை ஆடிய 4 போட்டிகளிலும் இந்தியாவே வென்றுள்ளது. 2007ல் 2 முறையும், 2012 மற்றும் 2014 ஆகிய ஆண்டுகளில் தலா ஒருமுறை இவ்விரு அணிகளும் உலக கோப்பையில் மோதியுள்ளன.

Story first published: Thursday, March 17, 2016, 17:31 [IST]
Other articles published on Mar 17, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+