Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஒரு வாட்டி கூட ஜெயிக்க முடியலையே இந்த தென் ஆப்பிரிக்கர்களை.. மாற்றி .யோசிப்பார்களா டோணி அன் கோ?

ஜோஹன்னஸ்பர்க்: இதுவரை தென் ஆப்பிரிக்காவில் ஐந்து டெஸ்ட் தொடர்களை ஆடியுள்ளது இந்தியா. ஆனால் ஒருமுறை கூட நாம் ஜெயித்ததில்லை. இந்த நிலையில் இன்று தொடங்கும் டெஸ்ட் தொடரையாவது இந்தியா வெல்லுமா என்ற பெரும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.

1992ம் ஆண்டு முதல் தென் ஆப்பிரிக்காவில் இந்தியா, மொத்தம் 5 டெஸ்ட் தொடர்களைச் சந்தித்துள்ளது. எதிலுமே நமக்கு வெற்றி கிடைத்ததில்லை. தோல்வி அல்லது டிராதான் நமக்குக் கிடைத்துள்ளது.

இந்த நிலையில்தான் 2 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடர் இன்று தொடங்கியுள்ளது. முதல் போட்டி ஜோஹன்னஸ்பர்க்கில் இன்று தொடங்குகிறது. இதில் இந்திய ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

கடைசியாக டிரா ஆன டெஸ்ட்

கடைசியாக டிரா ஆன டெஸ்ட்

இந்தியா கடைசியாக 2010-11 ஆண்டில் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தென் ஆப்பிரிக்காவுடன் ஆடியது. அந்தத் தொடர் ஆளுக்கு தலா ஒரு வெற்றி என்று டிராவில் முடிந்தது.

இப்போது 2 டெஸ்ட்

இப்போது 2 டெஸ்ட்

இப்போது 2 டெஸ்ட் போட்டிகள் கொண் தொடரில் இரு அணிகளும் சந்திக்கின்றன. முதல் டெஸ்ட் இன்று ஜோஹன்னஸ்பர்க்கில் தொடங்குகிறது. 2வது டெஸ்ட் போட்டி டர்பனில் டிசம்பர் 26 முதல் 30ம் தேதி வரை நடைபெறும்.

சச்சின் இல்லாத முதல் டெஸ்ட்

சச்சின் இல்லாத முதல் டெஸ்ட்

24 ஆண்டுகளில் சச்சின் டெண்டுல்கர் இல்லாமல் இந்தியா விளையாடவுள்ள முதல் டெஸ்ட் போட்டி இது.

அஸாருதீன் தலைமையில் முதல் தோல்வி

அஸாருதீன் தலைமையில் முதல் தோல்வி

இந்தியா முதன் முதலில் 1992ம் ஆண்டு அஸாருதீன் தலைமையில் தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் போட்டிகளில் ஆடியது.

நான்கு தோல்வி - ஒரு டிரா

நான்கு தோல்வி - ஒரு டிரா

இதுவரை மொத்தம் 5 டெஸ்ட் தொடர்களில் இந்தியா ஆடியுள்ளது. அதில் நான்கு தொடர்களை இழந்தது. ஒரு தொடர் டிரா ஆனது.

300 விக்கெட் எடுக்கத் தயாராகும் ஜாகிர் கான்

300 விக்கெட் எடுக்கத் தயாராகும் ஜாகிர் கான்

இந்திய வேகப் பந்து வீிச்சாளர் தனது 300வது டெஸ்ட் விக்கெட்டை எடுக்க இன்னும் 5 விக்கெட்கள் தேவை என்ற நிலையில் இந்தத் தொடரில் புகுகிறார்.

ஜாகிர்தான் சீனியர்

ஜாகிர்தான் சீனியர்

தற்போது தென் ஆப்பிரிக்கா வந்துள்ள இந்திய அணி வீரர்களியே சீனியர் ஜாகிர்தான். 88 டெஸ்ட் போட்டிகளில் அவர் ஆடியுள்ளார்.

சாதனைக்குக் காத்திருக்கும் டோணி

சாதனைக்குக் காத்திருக்கும் டோணி

கங்குலிதான் இந்தியாவுக்கு அதிக டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக இருந்தவர் என்ற சாதனையை வைத்துள்ளார். இன்றைய டெஸ்ட் மூலம் அதை கேப்டன் டோணி முறியடிக்கிறார். இருவரும் தற்போது 49 டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக இருந்துள்ளனர். இன்றைய டெஸ்ட் மூலம் 50 டெஸ்ட் போட்டிகளுக்குக் கேப்டனாகிறார் டோணி.

சச்சின்தான் நிறைய ரன் குவித்தவர்

சச்சின்தான் நிறைய ரன் குவித்தவர்

இந்திய, தென் ஆப்பிரிக்க வீரர்களிடையே, அதிக ரன் குவித்த இந்தியர் சச்சின்தான். அவர் 25 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 1741 ரன்களைக் குவித்துள்ளார்.

கும்ப்ளேதான் நிறைய விக்கெட் வீழ்த்தியவர்

கும்ப்ளேதான் நிறைய விக்கெட் வீழ்த்தியவர்

அதேபோல இந்தியப் பந்து வீச்சாளர்களில் அனில் கும்ப்ளேதான் அதிக விக்கெட் வீழ்த்தியவர் ஆவார். அவர் மொத்தம் 84 விக்கெட்களை சாய்த்துள்ளார்.

12 பேருக்கு இதுதான் முதல் முறை

12 பேருக்கு இதுதான் முதல் முறை

இந்திய அணியில் இடம் பெற்றுள்ள 17 வீரர்களில் 12 பேருக்கு தென் ஆப்பிரிக்கா புதுசு. இப்போதுதான் முதல் முறையாக அங்கு விளையாடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கோஹ்லி முதல் குமார் வரை

கோஹ்லி முதல் குமார் வரை

விராத் கோஹ்லி, ஆர்.அஸ்வின், உமேஷ் யாதவ், ரோஹித் சர்மா, ரவீந்திர ஜடேஜா, ஷிகர் தவான், அஜிங்கியா ரஹானே, அம்பட்டி ராயுடு, விருத்திமான் சாஹா, பிரக்யான் ஓஜா, முகம்மது ஷமி, புவனேஸ்வர் குமார் ஆகியோரே அந்தப் புதுமுகங்கள்.

இவங்களுக்கு மட்டுமே அனுபவம்

இவங்களுக்கு மட்டுமே அனுபவம்

கேப்டன் டோணி, முரளி விஜய், இஷாந்த் சர்மா, ஜாகிர் கான், சட்டேஸ்வர் புஜாரா ஆகியோர் மட்டுமே ஏற்கனவே இங்கு விளையாடிய அனுபவம் உடையவர்கள்.

Story first published: Wednesday, December 18, 2013, 11:05 [IST]
Other articles published on Dec 18, 2013
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+