Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்தியா-ஜிம்பாப்வே மோதல்: இந்த பத்து தகவல்களையும் பாக்கெட்டில் போட்டுக்கோங்க..!

ஆக்லாந்து: இந்தியா உலக கோப்பையில் கடந்த 5 லீக் போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ள நிலையில், 6வது மற்றும் கடைசி லீக் ஆட்டத்தில் ஜிம்பாப்வே அணியை வரும் 14ம்தேதி, சனிக்கிழமை சந்திக்க உள்ளது. இந்திய நேரப்படி காலை 6.30 மணிக்கு அப்போட்டி தொடங்க உள்ளது.

இந்த போட்டியிலும் வெற்றி பெற்று, கம்பீரமாக காலிறுதிக்குள் நுழைய இந்தியா முனைப்பு காட்டும். அதேநேரம், பெரும் அணிகளுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் ஜிம்பாப்வேயும் கடுமையாக போராடும் என்பதால், ஆட்டத்தில் அனல் பறக்க வாய்ப்பு உள்ளது.

இந்நிலையில், இவ்விரு அணிகளுக்கு நடுவே இதுவரை நடந்த போட்டிகள் குறித்த ஒரு சுருக்கமான பார்வை:

இந்தியாவின் ஆதிக்கம்

இந்தியாவின் ஆதிக்கம்

உலக கோப்பையில் இந்தியா-ஜிம்பாப்வே இதுவரை 8 முறை மோதியுள்ளன. அதில் இந்தியா 7 முறை வெற்றி பெற்றுள்ளது. இரு அணிகளிலுமே தற்போதுள்ள வீரர்கள் இதுவரை உலக கோப்பையில் மோதிக் கொண்டதில்லை. ஏனெனில், கடைசியாக இவ்விரு அணிகளும், 2003 உலக கோப்பையில்தான் பலப் பரிட்சை நடத்தியுள்ளன.

முதல் ஆட்டம்

முதல் ஆட்டம்

1983 உலக கோப்பையில்தான், ஜிம்பாப்வேயை இந்தியா முதல் முறையாக சந்தித்தது. அதில் கபில்தேவின் அதிரடி ஆட்டத்தால் சரிவில் இருந்து மீண்ட இந்தியா வெற்றிவாகை சூடியது.

அப்போ கேப்டன்

அப்போ கேப்டன்

தற்போது இந்திய அணியின் பயிற்சியாளராக உள்ள டன்கன் பிளெட்சர்தான், 1983ல் ஜிம்பாப்வேக்கு கேப்டனாக இருந்தார்.

இரு செஞ்சுரிகள்

இரு செஞ்சுரிகள்

1983ல் ஜிம்பாப்வேக்கு எதிராக 175 ரன்கள் விளாசினார் கபில்தேவ். 1996ல் வினோத் காம்ப்ளி செஞ்சுரி அடித்தார். இவ்விரண்டும் உலக கோப்பையில் ஜிம்பாப்வேக்கு எதிராக இந்தியா பதிவு செய்த சதங்களாகும்.

அந்த பக்கம் யாருமில்லை

அந்த பக்கம் யாருமில்லை

இந்தியாவுக்கு எதிராக உலக கோப்பையில், ஜிம்பாப்வே வீரர் எவரும் இதுவரை செஞ்சுரி அடித்தது இல்லை.

ஸ்ரீநாத், மதன்லால்

ஸ்ரீநாத், மதன்லால்

ஜிம்பாப்வேக்கு எதிராக தலா 6 விக்கெட்டுகள் வீழ்த்தி மதன் லால் மற்றும் ஜவகல் ஸ்ரீநாத் ஆகியோர் முன்னணி பவுலர்களாக விளங்கினால், அந்த தரப்பில், பீட்டர் ராவ்சன் 7 விக்கெட்டுகளுடன் முதல் இடத்தில் உள்ளார்.

கபில் தேவ் டாப்

கபில் தேவ் டாப்

ஜிம்பாப்வேக்கு எதிராக 4 போட்டிகளில் கபில்தேவ் 228 ரன்கள் குவித்துள்ளார். ஜிம்பாப்வே தரப்பில் இந்தியாவுக்கு எதிராக 4 போட்டிகளில் ஆன்டி பிளவர் 161 ரன்கள் எடுத்துள்ளார்.

அசார், ஸ்ரீகாந்த்

அசார், ஸ்ரீகாந்த்

முகமது அசாருதீன், கபில் தேவ், கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் ஆகியோர் இந்தியா சார்பில் ஜிம்பாப்வேக்கு எதிராக அதிக போட்டிகளில் ஆடியுள்ளனர். இவர்கள் ஆடியுள்ளது, தலா 5 போட்டிகளாகும்.

அதிகபட்ச ஸ்கோர்கள்

அதிகபட்ச ஸ்கோர்கள்

1983 உலக கோப்பையின்போது, 8 விக்கெட் இழப்புக்கு 266 ரன்கள் குவித்தது, ஜிம்பாப்வே அணிக்கு எதிராக இந்தியாவின் அதிகபட்ச ஸ்கோராகும். 1999 உலக கோப்பையில், நமக்கெதிராக 252 ரன்கள் எடுத்தது ஜிம்பாப்வேயின் அதிகபட்ச ஸ்கோர். அந்த ஆட்டத்தில் இந்தியா தோற்றது.

ஒட்டுமொத்தமாக முன்னணி

ஒட்டுமொத்தமாக முன்னணி

உலக கோப்பை மட்டுமின்றி ஒட்டுமொத்தமாக இவ்விரு அணிகளும், 57 முறை மோதியுள்ளன. இதில் இந்தியா 44 போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. 10 போட்டிகளில் ஜிம்பாப்வே வென்றுள்ளது. இரு போட்டிகள் டை ஆகியுள்ளன. ஒரு போட்டியில் ரிசல்ட் கிடைக்கவில்லை.

Story first published: Thursday, March 12, 2015, 17:24 [IST]
Other articles published on Mar 12, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+