Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நீண்ட இடைவெளிக்கு பிறகு கிளம்பியது ஹெலிகாப்டர்! 101 மீட்டர் தூரத்திற்கு சிக்சர் அடித்த டோணி!

ஹைதராபாத்: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக கடைசி பந்தில் டோணி அடித்த 101 மீட்டர் தூர சிக்சர் சென்னை அணியின் தோல்வி ரணத்தை ரசிகர்களுக்கு மறக்க செய்துவிட்டது.

சாம்பியன்ஸ் லீக் டி20 தொடரின் முதலாவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் நேற்று ஹைதராபாத்தில் மோதின. முதலில் பேட் செய்த சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட ஓவர்களில் 157 ரன்களை எடுத்தது.

அடித்து நொறுக்கிய சிஎஸ்கே

அடித்து நொறுக்கிய சிஎஸ்கே

முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி, கொல்கத்தாவின் சுழற்பந்து கூட்டணியை சமாளிக்க முடியாமல் தடுமாறியது. இருப்பினும் வேகப்பந்து வீச்சை அடித்து நொறுக்கியது.

சிக்கன சிகாமணி நரைன்

சிக்கன சிகாமணி நரைன்

19வது ஓவரை, சிக்கன புயல், சுனில் நரைன் வீசினார். அப்போது களத்தில் நின்ற டோணியும், பிராவோவும் அவரது பந்து வீச்சில் பவுண்டரி அடிக்க முடியாமல் மிகவும் தடுமாறினர். இந்த நிலையில்தான் கடைசி ஓவரை வீச வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் அழைக்கப்பட்டார். அவரது ஓவரில் இரு வீரர்களும் அடித்து விளாசினர். குறிப்பாக டோணி பெயரை தட்டிக் கொண்டார்.

கிளம்பிடுச்சிய்யா, கிளம்பிடுச்சிய்யா

கிளம்பிடுச்சிய்யா, கிளம்பிடுச்சிய்யா

ஆட்டத்தின் கடைசி பந்தை ஓவர் பிட்ச்சாக யாதவ் வீச, ஆட்டத்தில் அதுவரை வெளிவராத ஹெலிகாப்டர் ஷாட் டோணியின் பேட்டிலிருந்து கிளம்பியது. கடைசி பந்தில் இமாலய சிக்சரை அடித்தார் டோணி. அரங்கமே ஆர்ப்பரித்தது. இந்த சிக்சர் மொத்தம் 101 மீட்டர் தூரத்தில் சென்று கூட்டத்தின் நடுவே விழுந்தது. நேற்றைய போட்டியிலேயே அதிக தூரத்துக்கு அடிக்கப்பட்ட சிக்சர் அதுதான்.

எம்.எஸ்.டி = மைட்டி சிக்ஸ் டோணி

எம்.எஸ்.டி = மைட்டி சிக்ஸ் டோணி

டோணியின் சிக்சரை தொடர்ந்து, மைதானத்திலுள்ள திரையில், எம்.எஸ்.டோணி என்பதன் விரிவாக்கமாக, 'மைட்டி சிக்ஸ் டோணி' என்று ஒளிபரப்பானது. டிவிட்டரில் சிஎஸ்கே ரசிகர்கள் அந்த சிக்சரை பாராட்டி தள்ளிவிட்டனர். சிறிது காலமாக ஒளிந்திருந்த ஹெலிகாப்டர் ஷாட்டை நேற்று பார்த்த மகிழ்ச்சியில் சென்னை ரசிகர்கள் ஆனந்த கூத்தாடினர்.

கிளப்பிட்டோமில்ல

கிளப்பிட்டோமில்ல

நேற்றைய சிக்சர் 2011 உலக கோப்பை இறுதி போட்டியில் வெற்றிக்கான ரன்னாக டோணியால் அடிக்கப்பட்ட சிக்சரை நினைவு கூறுவதாக இருந்தது. சொல்லப்போனால் அதைவிட இது சற்று உயரம் அதிகம். கொல்கத்தாவுடன் தோல்வியடைந்தாலும், டோணி ஹெலிகாப்டர் கிளம்பிவிட்ட மகிழ்ச்சியுள்ளனர் சென்னை ரசிகர்கள்.

Story first published: Thursday, September 18, 2014, 15:46 [IST]
Other articles published on Sep 18, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+