Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

10th Result: விராட் கோலி பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் வாங்கிய மதிப்பெண் எவ்வளவு தெரியுமா?

டெல்லி: தமிழகம் முழுவதும் இன்று பத்தாம் வகுப்பு பொது தேர்வுக்கான முடிவுகள் வெளியாகியிருக்கிறது இதில் பலர் வெற்றியைப் பெற்றாலும், சிலர் தோல்வியும் தழுவி இருக்கிறார்கள். மதிப்பெண்கள் தான் அனைத்தையும் தீர்மானிக்கிறது என்று தவறான ஒரு கண்ணோட்டம் நமது சமூகத்தில் இருக்கிறது.இந்த சூழலில் இந்திய கிரிக்கெட் அணியில் நட்சத்திர வீரரான விராட் கோலி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் எவ்வளவு மதிப்பெண்கள் பெற்று இருக்கிறார் என்பதை தற்போது பார்க்கலாம்.

விராட் கோலி 2004 ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுதியிருக்கிறார். ஆனால் அவர் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் படித்திருக்கிறார். ஆங்கிலத்தில் விராட் கோலி 83 மதிப்பெண்கள் பெற்று இருக்கிறார். ஹிந்தியில் விராட் கோலி 75 மதிப்பெண்கள் பெற்று இருக்கிறார்.விராட் கோலிக்கு கணிதம் என்றால் பிடிக்கவே பிடிக்காதாம்.

Virat kohli

ஆனால் கணிதத்தில் விராட் கோலி 51 மதிப்பெண்கள் பெற்று இருக்கிறார். இதேபோன்று அறிவியலில் விராட் கோலி 55 மதிப்பெண்களை பெற்றிருக்கிறார். அதிகபட்சமாக சமூக அறிவியலில் விராட் கோலி 81 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இன்ட்ரொடக்ஷன் ஐடி என்ற பாடத்தில் விராட் கோலி 74 மதிப்பெண்கள் பெற்று இருக்கிறார்.

விராட் கோலி பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 69.8% மதிப்பெண்களை பெற்றுள்ளார்.இது தொடர்பாக விராட் கோலியை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள விராட் கோலி மார்க் சீட் இருக்கும் விஷயங்களை விட நம் கேரக்டரில் சேர்ந்திருக்கும் விஷயங்கள்தான் மிகவும் முக்கியம் என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

வாழ்க்கையில் நாம் எவ்வளவு மதிப்பெண்கள் பெற்றாலும் எந்தத் துறையில் வேண்டுமானாலும் நாம் சாதிக்கலாம் என்பதற்கு விராட் கோலி போன்ற வீரர்கள் உதாரணம். இன்னும் சொல்லப்போனால் பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அவர் அதற்குள் இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாட தொடங்கிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Friday, May 16, 2025, 18:19 [IST]
Other articles published on May 16, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+