Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் வைபவ் சூர்யவன்ஷி Fail? மறு கூட்டலுக்கு விண்ணப்பித்ததா BCCI..உண்மை என்ன?

ஜெய்ப்பூர்: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக களமிறங்கிய 14 வயது வீரரான வைபவ் சூர்யவன்சி பத்தாவது சிபிஎஸ்இ பொது தேர்வில் பெயிலானதாக செய்திகள் வெளியாகி உள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய் ஏலத்தில் 14 வயது வீரரான வைபவ் சூரியன்ஷி தேர்வு செய்யப்பட்டார்.

இந்த நிலையில் தொடர்ந்து அதிரடியாக விளையாடி வரும் அவர் குஜராத்துக்கு எதிராக 35 பந்துகளில் சதம் அடித்து சாதனை படைத்தார். இதனால் வைபவ் சூரியவன்சியை ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமே கொண்டாடி வருகிறது.

IPL 2025 10th Exam Results Vaibhav suryavanshi 2025

இந்த தருணத்தில் வைபவ் சூரியவன்சி பத்தாவது சிபிஎஸ்இ பொது தேர்வில் தோல்வி அடைந்ததாக செய்திகள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவியது. மேலும் கிரிக்கெட்டில் அவுட்டா இல்லையா என டிஆர்எஸ் பார்ப்பது போல் பிசிசிஐ இந்த விஷயத்தை கேள்விப்பட்டு வைபவ சூர்யவன்சி தேர்வுத்தாளை மறு கூட்டல் செய்யுமாறு விண்ணப்பித்திருப்பதாகவும் செய்திகள் பரவியது.

மேலும் வைபவ் சூரியவன்ஷி கிரிக்கெட்டில் கவனம் செலுத்தியதால் தான் பத்தாவது வகுப்பு பொது தேர்வில் தோல்வியடைந்ததாகவும் மேலும் பிசிசிஐ இதில் ஏன் தலையிடுகிறது என்றும் பலரும் கேள்வி கேட்டு வருகின்றனர். ஆனால் இது எதுவுமே உண்மை கிடையாது என்பது தான் இங்கு காமெடி. இது தொடர்பாக சமூக வலைத்தளத்தில் வெளியான போஸ்ட் நகைச்சுவைக்காக போடப்பட்டது.

ஏனென்றால் இறுதியில் அந்த போஸ்டில் இது வெறும் பொழுதுபோக்குக்காக போடப்பட்ட பதிவு என்று இருக்கிறது. ஆனால் அதை யாரும் படிக்க தவறி விட்டார்கள். மேலும் வைபவ் சூர்யவன்சி தற்போது தான் எட்டாம் வகுப்பை படித்து வருகிறார். எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் ஒருவர் எப்படி பத்தாவது வகுப்பில் தோல்வியை தழுவுவார் என்றும் இங்கு கவனிக்க வேண்டியதாக இருக்கின்றது.

வைபவ் சூரியவன்சி கிரிக்கெட்டில் கவனம் செலுத்தினாலும் பள்ளிப் பருவத்தில் அடிப்படை தேர்வுகளை அவர் என்றும் மிஸ் செய்தது கிடையாது. ஒருவேளை கிரிக்கெட் தான் வாழ்க்கை என தெரிந்தாலும் வைபவ் சூர்யவன்சி கிரிக்கெட்டில் கவனம் செலுத்தினாலும், அவருக்கென தனி வகுப்புகள் தேர்வுகள் நடத்த பள்ளி நிர்வாகமும் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனால் இந்த செய்தி பொய்யானது.

Story first published: Friday, May 16, 2025, 12:48 [IST]
Other articles published on May 16, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+