ஸ்ரீலங்கன் பிரிமீயர் லீக்கில் அஸ்வின், பிரவின் உள்ளிட்ட 12 இந்திய வீரர்கள்

ஸ்ரீலங்கன் பிரிமீயர் லீக்கின்(எஸ்எல்பிஎல்) முதல் சீசன் வரும் ஜூலை மாதம் 19-ம் தேதி துவங்குகிறது. இதில் 12 இந்திய கிரிக்கெட் வீரர்கள் விளையாடுகின்றனர்.
ஐலேண்ட்கிரிக்கெட்.காம் இணையதளத்தில் உள்ள அறிக்கையின்படி இந்திய பிரிமீயர் லீக்கில் விளையாடிக் கொண்டிருக்கும் கிறிஸ் கெய்ல், போல்லார்டு உள்ளிட்ட சர்வதேச வீரர்கள் ஸ்ரீலங்கன் பிரமீயர் லீக்கில் விளையாடவுள்ளனர்.
தனது அதிரடி ஆட்டத்தால் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை முதலிடத்துக்கு கொண்டு வந்துள்ள கெய்ல் தவிர டேனியல் வெட்டோரியும் இலங்கையில் விளையாடுகிறார்.
இந்திய கிரிக்கெட் அணி வரும் ஜூலை மாதம் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. இந்நிலையில் ஸ்ரீலங்கன் பிரிமீயர் லீக்கில் பட்டேல், அஸ்வின் மற்றும் பிரவீன் குமார் பெயர்கள் உள்ளது.
இவர்கள் தவிர தினேஷ் கார்த்திக், இர்பான் பதான், மனிஷ் பாண்டே, மனோஜ் திவாரி, பால் வால்தாட்டி, ரவீந்திர ஜடேஜா, சௌரப் திவாரி, உமேஷ் யாதவ் மற்றும் வினய் குமார் பெயர்கள் அந்த இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பட்டியலில் உள்ளது.
அந்த பட்டியலில் இதுவரை 33 சர்வதேச வீரர்கள் பெயர்கள் உள்ளது. அதில் டேவிட் வார்னர், ஷஹித் அப்ரிதி, சோயப் அக்தர், உமர் அக்மல், அல்பீ மோர்க்கெல், கிப்ஸ், ஓ பிரயன், தமிம் இக்பால் உள்ளிட்ட பல பெயர்கள் உள்ளன.
Story first published: Thursday, June 7, 2012, 9:43 [IST]
Other articles published on Jun 7, 2012


Click it and Unblock the Notifications