Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இன்னும் 15 நாட்களே தான்.. டி20 உலகக்கோப்பைக்கு 13 வீரர்கள் உறுதி.. இந்திய அணியின் முழு விவரம்!

துபாய்: டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் 13 வீரர்களின் இடம் உறுதியாகியுள்ளது.

Recommended Video

Asia Cup 2022:Bangladesh-ஐ நொறுக்கிய Afghanistan! Super 4-க்கு Qualify ஆனது|Aanee's Appeal |*Cricket

நடப்பாண்டுக்கான டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் மாதம் முதல் ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ளது.

இதற்கு தயாராகும் வகையில் தான் தற்போது 6 நாடுகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை தொடர் நடைபெற்று வருகிறது.

டி20 உலகக்கோப்பை தொடர்

டி20 உலகக்கோப்பை தொடர்

இந்நிலையில் டி20 உலகக்கோப்பை தொடருக்கான ஏற்பாடுகளும் தற்போது சூடுபிடித்துள்ளது. அனைத்து நாடுகளும் வரும் செப்டம்பர் 15ம் தேதிக்குள் தங்களது 15 பேர் கொண்ட அணியை அறிவிக்க வேண்டும் என ஐசிசி அறிவித்துள்ளது. இதனால் சேட்டன் சர்மா தலைமையிலான இந்திய தேர்வுக்குழு, தீவிர ஆலோசனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

13 பேர் உறுதி

13 பேர் உறுதி

இந்திய அணியை பொறுத்தவரையில் 13 வீரர்கள் ஏற்கனவே உறுதி செய்யப்பட்டுவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆசிய கோப்பை அணியை வைத்தே, தேர்வாளர்கள் முடிவுக்கு வந்துள்ளனர். ஓப்பனிங்கை பொறுத்தவரையில் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் துணைக் கேப்டன் கே.எல்.ராகுல் உள்ளனர். கே.எல்.ராகுல் ஃபார்மில் இல்லை என்றாலும், அவர் தயாராகிவிடுவார் என நம்பிக்கை வைத்துள்ளனர்.

கோலியின் நிலைமை

கோலியின் நிலைமை

மிடில் ஆர்டரில் விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், தீபக் ஹூடா ஆகியோர் தேர்வாகியுள்ளனர். இதில் விராட் கோலி ஃபார்முக்கு திரும்பி வருவதால், இந்தியாவுக்கு கூடுதல் பலம் வந்துள்ளது. லோயர் ஆர்டரை பொறுத்தவரையில் தினேஷ் கார்த்திக் மற்றும் ஹர்திக் பாண்ட்யா சேர்க்கப்பட்டுள்ளனர்.

பவுலிங் யூனிட்

பவுலிங் யூனிட்

பந்துவீச்சில் சுழற்பந்துவீச்சாளர்கள் யுவேந்திர சாஹல் மற்றும் ரவீந்திர ஜடேஜா அகிய இருவரும் நேரடியாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். வேகப்பந்துவீச்சில் புவனேஷ்வர் குமார், தீபக் சஹார் மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். காயத்தால் பாதிக்கப்பட்டிருந்த தீபக் சஹார், அடுத்து வரக்கூடிய ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்க தொடரில் ஃபார்முக்கு வந்துவிடுவார் என கூறப்பட்டுள்ளது.

முழு பட்டியல்

முழு பட்டியல்

ரோகித் சர்மா, கே.எல்.ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்ட்யா, தீபக் ஹூடா, தினேஷ் கார்த்திக், ஜடேஜா, புவனேஷ்வர் குமார், யுவேந்திர சாஹல், அர்ஷ்தீப் சிங், தீபக் சஹார்

Story first published: Wednesday, August 31, 2022, 16:16 [IST]
Other articles published on Aug 31, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+