Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

13 வீரர்களுக்கு டார்கெட்.. ஐபிஎல் அணிகளுக்கு பிசிசிஐ அனுப்பிய சுற்றறிக்கை.. இனி என்ன நடக்கும்?

மும்பை: ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்னதாகவே அனைத்து அணிகளுக்கும் இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. 13 வீரர்களுக்கு இதில் நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.

2023ம் ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வரும் மார்ச் 31ம் தேதி முதல் தொடங்கவுள்ளது. அகமதாபாத்தில் நடைபெறவுள்ள முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

இதற்காக அனைத்து அணிகளும் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக சென்னை அணி சேப்பாக்கம் மைதானத்தில் சுமார் 1 மாத காலமாக தோனி ஆலோசனை வழங்கி வருகிறார்.

ஐபிஎல் தொடர்

ஐபிஎல் தொடர்

இந்த முறை ஐபிஎல் தொடரை எதிர்கொள்வதில் இந்திய வீரர்களுக்கு ஒரு சிக்கல் உருவாகியுள்ளது. 2013ம் ஆண்டுக்கு பிறகு ஒரு ஐசிசி கோப்பையை கூட வெல்லாமல் உள்ள இந்திய அணி, இந்தாண்டு 2 கோப்பையை வெல்ல வாய்ப்புள்ளது. வரும் ஜூன் 7ம் தேதி முதல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நடைபெறவுள்ளது. இதே போல இந்தாண்டு இறுதியில் உலகக்கோப்பை தொடர் நடைபெறவுள்ளது.

புது சிக்கல்

புது சிக்கல்

இதில் தான் இந்தியாவுக்கு சிக்கல். ஐபிஎல் தொடர் மே 28ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த தொடர் முடிந்த ஒரே வாரத்திற்குள் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி சுற்று தொடங்கிவிடும். எனவே அதற்குள்ளாக வீரர்கள் தயாராக வேண்டும். இதுஒருபுறம் இருக்க, ஐபிஎல் தொடரில் வீரர்கள் தங்களது உடல்நிலையை சரியாக பார்த்துக்கொள்ள வேண்டும். காயம் ஏற்பட்டால் பின்னடைவாகும்.

பிசிசிஐ அறிவுரை

பிசிசிஐ அறிவுரை

இந்நிலையில் ஐபிஎல் அணிகளுக்கு பிசிசிஐ சுற்றறிக்கை விடுத்துள்ளது. அதாவது ஜஸ்பிரித் பும்ரா, ஸ்ரேயாஸ் ஐயர் போன்ற வீரர்கள் காயத்தினால் பாதிக்கப்பட்டு நீண்ட நாட்களாக ஓய்வில் உள்ளனர். அவர்கள் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி சுற்றுக்கு வர வாய்ப்பு குறைவு. எனவே தற்போது ஃபிட்னஸுடன் இருக்கும் 13 பவுலர்களுக்கு அதிக ஓவர்களை கொடுக்க கூடாது, பவுலிங் வீசுவதற்கு அழுத்தம் தரக்கூடாது என அறிவுறுத்தியுள்ளனர்.

13 வீரர்கள் யார்

13 வீரர்கள் யார்

முகமது ஷமி, முகமது சிராஜ், உமேஷ் யாதவ், ஷர்துல் தாக்கூர், தீபக் சஹார், உம்ரான் மாலிக், புவனேஷ்வர் குமார், ரவிச்சந்திரன் அஸ்வின், யுவேந்திர சாஹல், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், அக்‌ஷர் பட்டேல், வாஷிங்டன் சுந்தர். இந்த 13 வீரர்களை தான் கண்காணிப்பிலேயே வைக்கவுள்ளனர்.

Story first published: Monday, March 27, 2023, 17:34 [IST]
Other articles published on Mar 27, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+