Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

எனக்கா டெஸ்ட் ஆட தெரியாது.. பேட்டிங்கில் பட்டையை கிளப்பிய 14 வயது வீரர் வைபவ்..பவுலிங்கில் உலக சாதனை

லண்டன்: ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக பட்டையை கிளப்பிய 14 வயது வீரரான வைபவ் சூரியவன்சி அண்மையில் இந்திய அண்டர் 19 அணியில் இடம் பெற்று இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறார்.

வைபவ் சூரியவன்சி வெறும் வெள்ளை நிற பந்து கிரிக்கெட்டுக்கு மட்டும்தான் சரியான நபராக இருப்பார் என்றும் அவருக்கு டெஸ்ட் கிரிக்கெட் விளையாட தெரியாது என்று பலரும் விமர்சித்து இருந்தனர். இதற்கு ஏற்றார் போல் அண்டர் 19 ஒரு நாள் போட்டிகளில் பட்டையைக் கிளப்பிய சூரியவன்சி இங்கிலாந்து அண்டர் 19 அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 13 பந்துகளை எதிர் கொண்டு 14 ரன்கள் மட்டும் தான் சேர்த்தார்.

Vaibhav suryavanshi

எனினும் சிஎஸ்கே வீரரான ஆயுஷ் மாத்ரே 115 பந்துகளில் 102 ரன்கள் சேர்த்தார். இதேபோன்று விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் அபி 90 ரன்களில் சேர்க்க ராகுல் குமார் 85 ரன்கள் எடுத்தார். இதன் காரணமாக இந்திய அண்டர் 19 அணி 540 ரன்கள் எடுத்தது. இந்த நிலையில் இங்கிலாந்து அண்டர் 19 அணி பேட்டிங் செய்தது.

முதல் இன்னிங்சில் அந்த அணி 439 ரன்கள் குறித்தது. இதில் வைபவ் சூர்யவன்ஷி ஏழு ஓவர்கள் வீசி 17 ரன்கள் விட்டுக் கொடுத்து இங்கிலாந்து விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆன தாமஸ் விக்கெட்டை வீழ்த்தினார்.இதன் மூலம் அண்டர் 19 கிரிக்கெட்டில் விக்கெட் வீழ்த்திய இளம் வயது பவுலர் என்ற உலக சாதனை அவர் படைத்தார்.

எனினும் தமக்கு டெஸ்ட் கிரிக்கெட்டில் பேட்டிங் செய்ய வராது என்ற விமர்சனத்திற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இரண்டாவது இன்னிங்சில் களம் இறங்கிய வைபவ் சூரியவன்சி வழக்கம் போல் தன்னுடைய அதிரடி ஆட்டத்தை காண்பித்தார்.39 பந்துகளில் அரைச்சதம் அடித்த அவர் 44 பந்துகளை எதிர் கொண்டு 5 ரன்கள் சேர்த்தார்.

சூரியவன்ஷி அதிரடியால் இந்திய அணியில் முன்னிலை கிடுகிடுவென உயர்ந்தது. தற்போது மூன்றாவது நாள் ஆட்ட நேரம் முடிவில் இந்திய அணி இங்கிலாந்தை விட 229 ரன்கள் முன்னிலை பெற்று இருக்கின்றது. கடைசி நாள் ஆட்டம் இன்று நடைபெற உள்ளது.

Story first published: Tuesday, July 15, 2025, 7:30 [IST]
Other articles published on Jul 15, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+