நடப்பாண்டிலும் திரும்பிப் பார்க்க வைக்குமா சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி?
மும்பை: 6வது ஐபிஎல் போட்டியில் முதல் முறையாக களமிறங்கி அசத்திய சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நடப்பு ஐ.பி.எல். போட்டியிலும் சிறப்பாக விளையாடும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
சன் ரைசர்ஸ் அணியின் கேப்டன் ஷிகார் தவாண். இவருக்கு கை கொடுக்கும் வகையில் மேற்கிந்திய தீவுகள் அணியின் ஷமியை உள்ளடக்கிய அணி. இந்த அணியின் நம்பிக்கைக்குரிய பந்துவீச்சாளராக இருக்கிறார் அமித் மிஸ்ரா.
வங்கதேசத்தில் நடைபெற்ற 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் அசத்தியவர் அமித் மிஸ்ரா. மேலும் கரன் ஷர்மா, ஸ்டெய்ன், ஆரோன் பிஞ்ச், வார்னர் ஆகியோரும் இந்த அணியின் தூண்கள்..

டெக்கான் சார்ஜர்ஸ்
2008 ஆம் ஆண்டு முதல் 2012ஆம் ஆண்டு வரை டெக்கான் சார்ஜர்ஸ் அணியாக இருந்தது ஹைதராபாத். 2009-ல் சாம்பியன் பட்டத்தைப் பெற்றது அந்த அணி.

அரை இறுதியில்
2010ம் ஆண்டு அரை இறுதிப் போட்டியுடன் வெளியேறியது டெக்கான் சார்ஜர்ஸ். 2012வரை இந்த பெயரிலேயே ஆடியது.

சன் ரைசர்ஸ் ஹைதராபாத்..
சன் ரைசர்ஸ் ஹைதராபாத்..

வார்னர் ரூ5.5. கோடி
இந்த அணியில் டேவிட் வார்னர் தான் அதிக விலை கொடுத்து வாங்கப்பட்டவர் .. அவருக்கான விலை ரூ5.5 கோடி

யார்? யார்?
தவாண், ஸ்டெய்ன், வார்னர், அமித் மிஸ்ரா, புவனேஸ்குமார், ஆரோன் பிஞ்ச், கரன் ஷர்மா, ஷமி, இஷாந்த் ஷர்மா, இர்பான் பதான், ராகுல், ஹென்ரிக்ஸ், ரசூல், ஹோல்டர், வேணுகோபால் ராவ், நமாஜ் ஓஜா, பிரசாந்த் பரமேஸ்வரன், டெய்லர், ஆஷிஸ் ரெட்டி, அமித் பெளனிகர்


Click it and Unblock the Notifications