Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

யாருப்பா நீ? 6 அடி 9 இன்ச் ஹைதரபாத் சிறுவன் பவுலிங்கை கண்டு எஸ்கேப் ஆன பாகிஸ்தான் பேட்ஸ்மேன்

ஹைதராபாத் : இந்தியாவின் ஹைதராபாத்தை சேர்ந்த 18 வயது சிறுவன் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வலைப் பயிற்சியில் பந்து வீசினார்.

அவரது உயரம் மற்றும் பந்து பவுன்ஸ் ஆகும் விதத்தை கண்டு பாகிஸ்தான் அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் பாக்கர் ஜமான் அவர் பந்துகளை சந்திக்காமல் நழுவி இருக்கிறார்.

2023 ஐசிசி உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க இந்தியா வந்துள்ளது பாகிஸ்தான் அணி. நியூசிலாந்து அணியுடன் அந்த அணி தன் முதல் உலகக்கோப்பை பயிற்சிப் போட்டியில் பங்கேற்க இருந்த நிலையில், பாகிஸ்தான் வீரர்கள் அதற்கான வலை பயிற்சியில் ஈடுபட்டனர்.

18 year old Hyderabad net bowler Nishanth Saranu make Fakhar Zaman afraid of his bouncers

பாகிஸ்தான் அணியின் முன்னணி வேகப் பந்துவீச்சாளர்கள் ஹாரிஸ் ரௌப் மற்றும் ஷஹீன் ஷா அப்ரிடி முதலில் வலையில் பந்து வீசினர். அவர்கள் பந்து வீசி முடித்த பின் உள்ளூர் வீரர்களை வலைப் பயிற்சியில் பந்து வீச அழைக்க முடிவு செய்தார் பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்கல்.

ஹைதரபாத்தை சேர்ந்த இளம் பந்துவீச்சாளர்கள் பலர் தங்கள் வாய்ப்புக்காக காத்துக் கொண்டு இருந்தனர். அப்போது 6 அடி 9 இன்ச் உயரம் கொண்ட நிஷாந்த் சரணு மோர்கல் கண்களை ஈர்த்தார். அவரை அழைத்து பாகிஸ்தான் பேட்ஸ்மேன்களுக்கு முடிந்த வரை அதிக வேகத்தில் பந்து வீசுமாறு கூறி இருக்கிறார்.

நிஷாந்த் இயல்பாகவே 125 முதல் 130 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசும் திறன் கொண்டவர். அவர் பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள் போல 140க்கு மேல் வீச முயற்சி செய்தார். அவரது உயரத்துக்கு பந்துகள் எளிதாக பவுன்ஸ் ஆனது.

அதைக் கண்ட பாகிஸ்தான் பேட்ஸ்மேன் பாக்கர் ஜமான் அந்த இடத்தை விட்டு நழுவினார். நிஷாந்த் பந்துகள் பவுன்ஸ் ஆவதால் தனக்கு காயம் ஏற்பட்டு விடுமோ என அஞ்சி அவர் வெளியேறினார். அதன் பின் நிஷாந்த் பாகிஸ்தான் அணியின் பின்வரிசை வீரர்களுக்கு பந்து வீசினார்.

நிஷாந்த் சரணு தற்போது ஹைதராபாத் கிரிக்கெட் அமைப்புக்கு உட்பட்ட அண்டர் 19 அணிகளில் ஆடி வருகிறார். அடுத்து ஹைதராபாத் முதல் தர கிரிக்கெட் அணியில் இடம் பெற வேண்டும் என்ற லட்சியத்தோடு இருக்கிறார். ஏற்கனவே, இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதிய ஹைதராபாத் ஒருநாள் போட்டியின் போதும் நிஷாந்த் நியூசிலாந்து அணிக்கு வலைப் பயிற்சியில் பந்து வீசி இருக்கிறார்.

பாகிஸ்தான் அணிக்கு பந்து வீசியது பற்றி பேசிய நிஷாந்த், மோர்னே மோர்கல் தன்னை ஐபிஎல் சமயத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு வலையில் பந்து வீச வர முடியுமா? என கேட்டதாக கூறி உற்சாகமாக காணப்பட்டார்.

Story first published: Friday, September 29, 2023, 17:49 [IST]
Other articles published on Sep 29, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+