Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

1983 திரைப்படம் மூலம் உண்மையான கிரிக்கெட் வீரர்களுக்கு அடிச்சது லக்..!! கபில் தேவ்க்கு கொட்டிய கோடி!

மும்பை: 1983 ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணி உலகக் கோப்பையை வென்றதை மையமாக வைத்து 83 என்ற பாலிவுட் படம் எடுக்கப்பட்டுள்ளது.

இந்தப் படம் ஹிந்தி, தமிழ், தெலுங்கு, ஆகிய மொழிகளில் உருவாக்கப்பட்டு வரும் டிசம்பர் 24ஆம் தேதி திரைக்கு வருகிறது

கேப்டன் கபில்தேவ்வாக ரன்வீர் சிங் நடித்து உள்ளார், ஸ்ரீகாந்தாக நடிகர் ஜீவா நடித்துள்ளார்.

ரசிகர்கள் வரவேற்பு

ரசிகர்கள் வரவேற்பு

ஒருநாள் போட்டிகளில் அப்போது கத்துக்குட்டி அணியாக இருந்த இந்திய அணி, யாரும் எதிர்பாராத விதமாக எவ்வாறு உலகக் கோப்பையை வென்றது. எவ்வளவு சிரமங்களை சந்தித்து என்பதை இந்தப் படம் தத்துருபமாக தெரிவித்துள்ளது. இந்தப் படத்தின் டிரைலர் ஏற்கனவே ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

பி.சி.சி.ஐ.யிடம் பணமில்லை

பி.சி.சி.ஐ.யிடம் பணமில்லை

உலகக் கோப்பையை இந்திய அணி வென்றபோது, வீரர்களுக்கு பரிசுத் தொகை அளிக்க பி.சி.சி.ஐ.யிடம் அப்போது பணம் இல்லை. இதனால் கச்சேரி ஒன்றை நடத்தி, அதன் மூலம் திரட்டிய பணத்தில் தான் கபில்தேவ் தலைமையிலான வீரர்களுக்கு பரிசுத் தொகை வழங்கப்பட்டது.

ரூ.2100 சம்பளம்

ரூ.2100 சம்பளம்

உலகக் கோப்பையை வென்ற போது வீரர்களுக்கு பி.சி.சி.ஐ. வழங்கிய சம்பளம் வெறும் 2100 ரூபாய் தான். ஆனால், 83 படத்திற்கு உண்மையான வீரர்களின் கதையை எடுப்பதற்காக, அவர்களின் உரிமையை பெற வேண்டியது அவசியம். இதற்காக கபில்தேவ் தலைமையிலான அணிக்கு பட நிறுவனம் எவ்வளவு பணம் வழங்கியது தெரியுமா?

மகிழ்ச்சி

மகிழ்ச்சி

15 கோடி ரூபாயை படத் தயாரிப்பு நிறுவனம் வழங்கியுள்ளது. இதில் கபில்தேவ்க்கு மட்டும் 5 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உண்மையாக விளையாடிய போது அணிக்கே வெறும் 10 லட்சம் ரூபாய் தான் வழங்கப்பட்டது. ஆனால் படத்திற்கு 15 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளதால் முன்னாள் சாம்பியன்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்

Story first published: Wednesday, December 22, 2021, 10:55 [IST]
Other articles published on Dec 22, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+