Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஓ அப்போ அது இந்தியாவுக்கு இல்லைய.. டி20 உலகக்கோப்பையில் எண்ட்ரி தந்த 1992 வரலாறு.. அப்படியே நடக்குதே

மெல்போர்ன்: டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியாவுக்கு சாதகமான வரலாறு இருக்கும் என நினைத்த ரசிகர்களுக்கு புதிய ஆச்சரியம் ஏற்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவில் கடந்த அக்டோபர் 16ம் தேதி தொடங்கிய டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இந்த முறை இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

இந்த போட்டி மெல்பேர்னில் உள்ள மைதானத்தில் வரும் நவம்பர் 13ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கு சாதகம்?

இந்தியாவுக்கு சாதகம்?

இந்த முறை இந்தியா தான் கோப்பையை வெல்லும் என கணிக்கப்பட்டது. அதற்கு காரணம் வரலாறு மீண்டும் திரும்பியது தான். இந்தியா உலகக்கோப்பையை வென்ற 2011ம் ஆண்டு நடந்ததை போன்றே அனைத்து சம்பவங்களும் நடந்தன. பாகிஸ்தானின் முதல் தோல்வி, தென்னாப்பிரிக்காவிடம் இந்தியாவின் தோல்வி என அப்படியே நடந்தன.

1992ம் ஆண்டு வரலாறு

1992ம் ஆண்டு வரலாறு

இந்நிலையில் அவை அனைத்தும் தற்போது பாகிஸ்தானுக்கு சாதகமாக மாறியிருக்கிறது. இதற்கு காரணம் 1992ம் ஆண்டு உலகக்கோப்பை தான். அந்தாண்டின் முதல் போட்டியிலேயே பாகிஸ்தான் தோற்றது. இந்தாண்டும் அதே தான் நடந்தது. இந்தாண்டு நடைபெற்றதை போன்றே அப்போதும் குரூப் சுற்றில் இந்தியாவிடம் தோற்றது.

கடைசி நேரத்தில் வாய்ப்பு

கடைசி நேரத்தில் வாய்ப்பு

1992ம் ஆண்டு கடைசி நேரத்தில் தான் ஒரே ஒரு கூடுதல் புள்ளியுடன் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியிருந்தது. இதே போல இந்தாண்டும் கடைசி நேரத்தில் உள்ளே வந்தது. 1992ல் குரூப் சுற்றின் கடைசி 3 போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றி கண்டதை போலவே இந்தாண்டும் 3 வெற்றிகளை தொடர்ச்சியாக வென்றது.

 கோப்பை வென்றது யார்?

கோப்பை வென்றது யார்?

அந்த உலகக்கோப்பையில் நியூசிலாந்துக்கு எதிராக தான் பாகிஸ்தான் அரையிறுதியில் மோதி வெற்றி கண்டது. இந்தாண்டும் அச்சு அசலாக நியூசிலாந்து அணியை வீழ்த்தி இறுதி சுற்றுக்கு முன்னேறியது. அந்த தொடரில் கோப்பையை வென்றது பாகிஸ்தான் தான். அதே போன்று இந்த முறையும் நடக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Story first published: Friday, November 11, 2022, 19:52 [IST]
Other articles published on Nov 11, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+