Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான மூன்றாவது டெஸ்ட்.. இந்தியா சொதப்பல்.. வாஷ் அவுட்டை தவிர்க்குமா?

ஜோஹன்ஸ்பர்க்: இந்தியா தென்னாப்பிரிக்கவிற்கு கிரிக்கெட் தொடர் விளையாட சென்று இருக்கிறது. நினைத்தது போல இந்த தொடர் இந்திய அணிக்கு மிகவும் கடினமான ஒன்றாக இருக்கிறது.

இந்திய கேப்டன் கோஹ்லியின் தேர்வு முறை இதில் அதிகம் விமர்சிக்கப்படுகிறது. இன்றைய போட்டியிலும் வித்தியாசமான அணி தேர்வை செய்து இருக்கிறார்.

தற்போது 3வது டெஸ்ட் போட்டி ஜோஹன்ஸ்பர்க்கில் நடக்கிறது. இந்தியா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

தோல்வி

தோல்வி

கேப்டவுனில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா தென்னாபிரிக்காவின் 20 விக்கெட்டுகளை வீழ்த்தியும் மோசமாக தோற்றது. அதேபோல் இரண்டாவது போட்டியில் கோஹ்லி செஞ்சுரி அடித்தும் கூட தோல்வியை தழுவியது. இதனால் ஏற்கனவே இந்தியா தென்னாப்பிரிக்கா டெஸ்ட் தொடரை 2-0 என இழந்துள்ளது.

மோசமான பேட்டிங்

மோசமான பேட்டிங்

இரண்டு போட்டியிலும் இந்திய அணியின் பேட்டிங் மோசமாக இருந்தது. முதல் போட்டியில் ஹர்திக் பாண்டியா மட்டுமே சரியாக ஆடினார். இரண்டாவது போட்டியில் முரளி விஜயும், கோலியும் மட்டுமே சரியாக ஆடினார்கள். இதனால் இன்றைய போட்டியில் வாஷ் அவுட்டை தவிர்க்க இந்தியா முயற்சித்து வருகிறது.

மாற்றம்

மாற்றம்

இந்திய அணியில் பெரிய மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. ஒரு ஸ்பின் பவுலர் கூட அணியில் சேர்க்கப்படவில்லை. ஆல் ரவுண்டர் என்று பார்த்தால் ஹர்திக் பாண்டியா மட்டுமே இருக்கிறார். ஜடேஜா, அஸ்வின் இருவரும் அணியில் சேர்க்கப்படவில்லை. அதேபோல் ரோஹித் சர்மாவிற்கு பதில் ரஹானே சேர்க்கப்பட்டுள்ளார். விஜய் மட்டும் ஸ்பின் அவ்வப்போது போடக்கூடியவர்.

டாஸ் வென்றது

டாஸ் வென்றது

இந்தியா இந்த போட்டியில் டாஸ் வென்று இருக்கிறது. கோஹ்லி பேட்டிங் செய்ய முடிவெடுத்துள்ளார். முரளி விஜய் மற்றும் லோகேஷ் ராகுல் ஓப்பனிங் இறங்கினார்கள். ஆனால் இந்த முறையும் பேட்டிங் சொதப்பியது. வீரர்கள் அனைவரும் வரிசையாக அவுட் ஆனார்கள். கோஹ்லி அதிகமாக 54 ரன்னும், புஜாரா 50 ரன்னும் எடுத்தார்கள்.

முதல் நாள் முடிவு

முதல் நாள் முடிவு

இந்த நிலையில் முதல் இன்னிங்ஸ் முடிவில் இந்தியா அனைத்து விக்கெட்டையும் இழந்து 187 ரன்கள் மட்டும் எடுத்தது. எளிதான இலக்கை நோக்கி தென்னாப்பிரிக்கா ஆடி வருகிறது. ஆனால் அந்த அணியின் மார்க்ராம் புவனேஷ்வர்குமார் பந்தில் தொடக்கத்திலேயே அவுட் ஆனார். தென்னாப்பிரிக்கா முதல் நாள் முடிவில் 1 விக்கெட்டுக்கு 6 ரன் எடுத்துள்ளது.

Story first published: Wednesday, January 24, 2018, 21:21 [IST]
Other articles published on Jan 24, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+