தென்னாப்பிரிக்காவுடனான முதலாவது ஒரு நாள் போட்டி: டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சு!
ஜோகனஸ்பர்க்: தென்னாப்பிரிக்காவுடனான முதலாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
3 ஒரு நாள் போட்டி மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட டோணி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்கா சென்றுள்ளது. இரு அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி ஜோகனஸ்பர்க்கில் உள்ள வான்டரர்ஸ் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது.
ஒரு நாள் போட்டியில் நடப்பு ஆண்டில் 6 கோப்பைகளை தொடர்ந்து வென்றிருக்கும் முதல் நிலை அணியான இந்தியா, தென்னாப்பிரிக்கா மண்ணிலும் சாதிக்கும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோஹ்லி, ரோஹித் ஷர்மா, ஷிகார் தவானுக்கு சவலா
நடப்பு ஆண்டில் ஆயிரத்திற்கும் அதிகமான ரன்களை குவித்து கவனத்தை ஈர்த்துள்ள கோஹ்லி, ரோஹித் ஷர்மா, ஷிகார் தவான் ஆகியோர் தென்னாப்பிரிக்காவிலும் சிறப்பாக விளையாடுவது என்பது அவர்களுக்கான சர்வதேச அங்கீகாரத்துக்கு முக்கியமானது.

மிரட்டும் பந்துவீச்சு
தென்னாப்பிரிக்க அணியை பொறுத்தவரை பாகிஸ்தானுக்கு எதிரான ஒரு நாள் தொடரை சொந்த மண்ணில் 1-2 என்ற கணக்கில் அண்மையில் கோட்டை விட்டு அதிர்ச்சிக்குள்ளானது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் ஸ்டெயின், மோர்னே மோர்கல், பார்னல், சோட்சோப் ஆகியோர் பந்துவீச்ச்சு இந்தியாவை நிச்சயம் மிரட்டும்

21 ஆண்டுக்குப் பின்னர் சாதிக்குமா?
1992ஆம் ஆண்டு முதல் தென்னாப்பிரிக்காவில் விளையாடி வரும் இந்திய அணி இங்கு இதுவரை ஒரு நாள் தொடரை கைப்பற்றியதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

2வது போட்டி
2வது போட்டி வரும் 8ந் தேதி டர்பன் நகரில் பிற்பகல் 1.30 மணிக்கும், 3வது போட்டி 11 செஞ்சுரியனில் மாலை 5 மணிக்கும் நடைபெற உள்ளது.

இந்தியா பந்துவீச்சு
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் டோணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.


Click it and Unblock the Notifications