Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

முதல் டி-20 போட்டியில் தவான் அதிரடி.. இலங்கைக்கு இமாலய இலக்கு!

Recommended Video

இலங்கைக்கு 175 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா

கொழும்பு: இந்தியா, இலங்கை மோதும் முத்தரப்பு தொடரின் முதல் டி-20 போட்டி தற்போது நடக்கிறது. இதில் இந்திய அணி 5 விக்கெட்டுக்கு 174 ரன் எடுத்து இருக்கிறது.

இலங்கையில் இன்று இந்தியா, வங்கதேசம், இலங்கை மோதும் முத்தரப்பு டி-20 போட்டி தொடங்கி இருக்கிறது. இந்த தொடரில் மொத்தம் 7 போட்டிகள் நடக்கும்.இந்த 7 போட்டிகளும் கொழும்புவில் இருக்கும் பிரேமதாச மைதானத்தில்தான் நடக்கும்.

1st T-20 match in Sri Lanka against India

இலங்கையின் 70வது சுதந்திர தின கொண்டாட்டம் காரணமாக இந்த போட்டி நடத்தப்பட இருக்கிறது.இதற்கு நிதாஸ் கோப்பை போட்டி என்று பெயர் வைக்கப்பட்டு இருக்கிறது.

முதல் போட்டி தற்போது தொடங்கி இருக்கிறது. இந்திய அணியில் நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கிறது.

இந்திய விளையாடும் அணியில் ரோஹித் சர்மா, ஷிகர் தவான், ஷாஹல், தினேஷ் கார்த்திக், ஷரத்துல் தாக்குர், வாஷிங்டன் சுந்தர், ஜெயதேவ் உனட்கட், மனிஷ் பாண்டே, அக்சர் பட்டேல், கேஎல் ராகுல், ரெய்னா, ஆகியோருக்கு இடமளிக்கப்பட்டு இருக்கிறது.

இந்திய அணியை சேர்ந்த ரோஹித், ரெய்னா அடுத்தடுத்து அவுட் ஆகி ஆரம்பத்திலேயே அதிர்ச்சி அளித்தனர். ஆனால் தவான் அதிரடியாக 49 பந்தில் 90 ரன் எடுத்தார். இதில் 6 சிக்ஸ், 6 பவுண்டரி அடங்கும்.

இதனால் 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டை இழந்து இந்தியா 174 ரன் எடுத்து இருக்கிறது. இலங்கையை சேர்ந்த துஷ்மந்தா சமீரா அதிகமாக 2 விக்கெட் எடுத்தார்.

Story first published: Tuesday, March 6, 2018, 21:08 [IST]
Other articles published on Mar 6, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+