Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அடிலைடில் ஆஸி.யை சுருட்டி அள்ளிய இந்தியா.. முதல் டி 20 போட்டியில் "சூப்பர்ப்" வெற்றி!

அடிலைட்: இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான முதல் டுவென்டி 20 போட்டியில் இந்தியா அதிரடியாக ஆடி ஆஸ்திரேலியாவை சுருட்டி விரட்டியது.

இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரிலேயா முதலில் இந்தியாவை பேட் செய்யப் பணித்தது. இதையடுத்து இந்தியா 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 188 ரன்கள் குவித்தது. 200 ரன்களை இந்தியா தொடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அந்த இலக்கை இந்தியாவால் அடைய முடியாமல் போனது. விராத் கோஹ்லி அபாரமாக ஆடி கடைசி வரை அவுட்டாகாமல் 90 ரன்களைக் குவித்தார்.

கோஹ்லி மட்டும் சதம் போட்டிருந்தால், சர்வதேச டுவென்டி 20 போட்டிகளில் சதம் அடித்த 2வது வீரர் என்ற பெருமை இவருக்குக் கிடைத்திருக்கும். ரோஹித்திடம் தற்போது அந்த சாதனை உள்ளது.

1st T20I: Australia invite India to bat 1st; Hardik Pandya debuts, Yuvraj Singh back

முன்னதாக ரோஹித் சர்மா 31கள் ரன் குவித்து அவுட்டாக அதன் பின்னர் விராத் கோஹ்லியும், ரெய்னாவும் ரன் குவிப்பைத் தொடர்ந்தனர். ஷிகர் தவான் 5 ரன்களில் ஆட்டமிழந்தார்.

ரோஹித் சர்மா 20 பந்துகளில் 31 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து விராத் கோஹ்லியும், சுரெஷ் ரெய்னாவும் சேர்ந்து பட்டையைக் கிளப்பினர்.

கோஹ்லி அபாரமாக ஆடி அட்டகாசமான அரை சதம் போட்டு இந்தியாவின் ரன் குவிப்பை துரிதப்படுத்தினார். கடைசி வரை அதிரடியாக ஆடிய அவர் சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது முடியவில்லை. இறுதி வரை ஆட்டமிழக்காமல், 55 பந்துகளில் 90 ரன்கள் எடுத்தார் கோஹ்லி.

மறுபக்கம் சுரேஷ் ரெய்னா 34 பந்துகளில் 41 ரன்களைக் குவித்து ஆட்டமிழந்தார். கேப்டன் டோணி தனக்குக் கிடைத்த 3பந்துகளில் 11 ரன்களைக் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதில் ஒரு சிக்ஸரும், ஒரு பவுண்டரியும் அடக்கம். இறுதியில் இந்தியா 3 விக்கெட் இழப்புக்கு 188 ரன்களைக் குவித்தது.

அதன் பிறகு ஆட வந்த ஆஸ்திரேலியா ஆரம்பத்தில் அதிரடியாகத்தான் ஆடியது. ஆனால் இந்தியாவின் பவுலிங்கும், பீல்டிங்கும் ஆஸ்திரேலியாவின் வேகத்தைத் தடுத்து நிறுத்தி விட்டது.

ஆஸ்திரேலிய அணியில் கேப்டன் பின்ச் மட்டுமே சிறப்பாக ஆடினார். அவர் 33 பந்துகளில் 44 ரன்களைக் குவித்தார். அவரை அஸ்வின் அழகாக எல்பிடபிள்யூவாக்கினார். மற்றவர்களில் யாருமே பெரிய ஸ்கோரை எட்ட முடியவில்லை.

ஸ்டீவ் ஸ்மித் 21, வார்னர் 17, லின் 17, ஷான் வாட்சன் 12, பால்க்னர் 10 என வீ்ழ்ந்தனர். இறுதியில் 19.3 ஓவர்களில் ஆஸ்திரேலியா 151 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

ஆஸ்திரேலியா பயணத்தில் ஒரு நாள் தொடரை இழந்த இந்தியா அதில் கடைசிப் போட்டியில் மட்டும் வென்றது. தற்போது டுவென்டி 20 தொடரில் முதல் போட்டியிலேயே அசத்தல் வெற்றியைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி இந்தியாவை முதலில் பேட் செய்யப் பணித்தது. இந்திய அணியில் யுவராஜ் சிங் மீண்டும் இடம் பிடித்தார். புதுமுக வீரராக ஹர்டிக் பாண்ட்யா இந்திய அணியில் இடம் பெற்று தனது முதலாவது சர்வதேச டுவென்டி 20 போட்டியாக இன்றையப் போட்டியில் ஆடினார்.

Story first published: Tuesday, January 26, 2016, 17:46 [IST]
Other articles published on Jan 26, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+