Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இது ஆட்டம்.... ஆஸி. மகளிர் அணியை அதகளப்படுத்திய இந்திய டி 20 வீராங்கனைகள்

அடிலைட்: அடிலைடில் நடந்த இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய மகளிர் அணிகளுக்கு இடையிலான டுவென்டி 20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றியைப் பெற்றுள்ளது.

இந்திய வீராங்கனைகள் பவுலிங் மற்றும் பேட்டிங்கில் ஆஸ்திரேலியாவை புரட்டி எடுத்து சாதனை வெற்றியைப் பெற்றுள்ளனர்.

இரு அணிகளுக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட டுவென்டி 20 தொடர் இன்று தொடங்கியது. இதில் முதல் போட்டியில் இந்தியா அபாரமாக விளையாடி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஆண்கள் அணியைப் போலவே

ஆண்கள் அணியைப் போலவே

இந்திய மற்றும் ஆஸ்திரேலிய ஆண்கள் அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டுவென்டி 20 தொடர் இன்று தொடங்குகிறது. அடிலைடில் முதல் போட்டி இன்று நடக்கிறது.

பெண்கள் அணிகளின் மோதல்

பெண்கள் அணிகளின் மோதல்

அதேபோல இரு நாட்டு மகளிர் அணிகளுக்கும் இடையேயும் 3 போட்டிகள் கொண்ட டுவென்டி 20 தொடர் இன்று தொடங்கியது. முதல் போட்டி அடிலைடில் நடந்தது. இதில் இந்தியா வெளுத்துக் கட்டி வெற்றியைப் பெற்றது.

ஆஸ்திரேலியா 141

ஆஸ்திரேலியா 141

முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணியை இந்திய பவுலர்கள் சிறப்பாக செயல்பட்டு 141 ரன்களுக்கு நிறுத்தினர். அதன் பின்னர் அதிரடியாக ஆடிய இந்திய வீராங்கனைகள் 18.4 ஓவர்களில் வெற்றியைப் பெற்று அசத்தினர்.

மாபெரும் சேஸிங்

மாபெரும் சேஸிங்

மிகப் பெரிய இலக்கை எளிதாக சேஸ் செய்து இந்தியா வெற்று பெற்று சாதனையும் படைத்தது. அடுத்த போட்டி மெல்போர்னில் நடைபெறவுள்ளது. கடைசிப் போட்டி சிட்னியில் நடக்கும்.

அசத்திய மூவர்

அசத்திய மூவர்

இந்திய அணியின் ஹர்மன்ப்ரீத் கெளர் அதிரடியாக ஆடி 46 ரன்களைக் குவித்தார். அதேபோல ஸ்மிருதி மந்தனா 29, வேதா கிருஷ்ணமூர்த்தி 36 ரன்களை எடுத்தனர்.

Story first published: Tuesday, January 26, 2016, 13:51 [IST]
Other articles published on Jan 26, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+