Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரண களத்திலும் ஒரு கிளுகிளுப்பு.. அதி வேகத்தில் 'ஆயிரத்தில் ஒருவனாக' மாறிய கோஹ்லி!

தர்மசாலா: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான நேற்றைய டி20 போட்டியில் இந்தியா 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்திருந்தாலும், சில சாதனைகள் இந்திய வீரர்களால் படைக்கப்பட்டன. அதில் கோஹ்லியின் அதிவேக ஆயிரம் ரன் கடப்பும் ஒன்றாகும். சர்வதேச டி20 போட்டிகளில், உலகிலேயே அதிவேகமாக ஆயிரம் ரன்களை கடந்துள்ளது கோஹ்லிதான்.

ஆயிரத்தில் ஒருவன்

ஆயிரத்தில் ஒருவன்

2010ல் ஜிம்பாப்வேக்கு எதிராக டி20 போட்டிகளில் களமிறங்கிய கோஹ்லி, நேற்று தனது 29வது போட்டியில், 27வது இன்னிங்சை (களமிறங்கியது) ஆடினார். அப்போட்டியில் ஆயிரம் ரன்களை கடந்தார். 27 பந்துகளில் 43 ரன்கள் விளாசிய கோஹ்லி, இதுவரை 1015 ரன்களை குவித்துள்ளார்.

அசாத்திய ஆட்டம்

அசாத்திய ஆட்டம்

மேலும் அதிவிரைவில், ஆயிரம் ரன்களை கடந்த முதல் டி20 கிரிக்கெட் வீரர் என்ற பெருமையையும் கோஹ்லி பெற்றார். டிவில்லியர்ஸ் போல பல கோணங்களுக்கு சென்று ஆடாவிட்டாலும், கெய்ல் போல மைதானத்திற்கு வெளியே சிக்சர்களை பறக்கவிடாவிட்டாலும், நேர்த்தியான ஆட்டத்தால், அதிரடியாக இந்த ரன்களை எட்டி சாதித்துள்ளார் கோஹ்லி.

2வது இடம்

2வது இடம்

கோஹ்லிக்கு அடுத்தபடியாக இங்கிலாந்து பேஸ்ட்மேன்கள் கெவின் பீட்டர்சன் மற்ரும் அலெக்ஸ் ஹேல்ஸ் ஆகியோர் தலா 32 இன்னிங்சுகளில் இச்சாதனையை படைத்து முதலிடத்தில் இருந்து வந்தனர். தற்போது 2வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

கெய்ல் 3வது

கெய்ல் 3வது

34 இன்னிங்சுகளில் 1000 ரன்களை கடந்த கிறிஸ் கெய்ல் 3வது இடத்திலும், 35 இன்னிங்சுகளில் கடந்த நியூசிலாந்தின் பிரண்டன் மெக்கல்லம் 4வது இடத்திலும், 36 இன்னிங்சுகளில் ஆயிரம் ரன்களை கடந்த சக நாட்டு வீரர் மார்டின் கப்தில் 5வது இடத்திலும் உள்ளனர்.

ரோகித் ஷர்மா, டோணி சாதனை

ரோகித் ஷர்மா, டோணி சாதனை

மேலும், இந்திய பேட்ஸ்மேன் ஒருவர் டி20 சர்வதேச போட்டியொன்றில் அடித்த அதிக ஸ்கோர் என்ற பெருமை ரோகித் ஷர்மா நேற்று விளாசிய 106 ரன்களை சாரும். மேலும், டி20 போட்டிகளில் 50 முறை இந்தியாவுக்கு தலைமேயேற்ற பெருமை நேற்றைய போட்டியின் மூலம் டோணியை வந்தடைந்தது.

Story first published: Saturday, October 3, 2015, 11:40 [IST]
Other articles published on Oct 3, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+