Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கடைசில பாண்ட்யா இடத்துக்கே ஆபத்தாமே... பிளேயிங் லெவனில் இவங்கதானாம்... கோலியின் புது ஸ்கெட்ச்!

பாஸ்ட் டிபார்ட்மெண்டிலும் ஆஸியை புரட்டியெடுத்த முகமது சிராஜ்க்கு வாய்ப்பா அல்லது அனுபவம் கொண்ட இஷாந்த் சார்மா இறங்குவாரா என சிக்கல் உள்ளது சென்னை: பிளேயிங் லெவனில் யாரை சேர்ப்பது, யாரை உட்கார வைப்பது என்பது தேர்வு குழுவுக்கும், கேப்டன் கோலிக்கும் புது தலைவலியை ஏற்படுத்தி இருக்கிறது.

3-வது ஸ்பின்னர் கட்டாயம் தேவைப்படுவதால் ஹார்திக் பாண்ட்யாவை உட்கார வைத்து விட்டு வாஷிங்டன் சுந்தருக்கு வாய்ப்பு கொடுக்கலாம் என்று கூறப்படுகிறது.

பாஸ்ட் டிபார்ட்மெண்டிலும் ஆஸியை புரட்டியெடுத்த முகமது சிராஜ்க்கு வாய்ப்பா அல்லது அனுபவம் கொண்ட இஷாந்த் சார்மா இறங்குவாரா என சிக்கல் உள்ளது

களைகட்டும் கிரிக்கெட் திருவிழா

களைகட்டும் கிரிக்கெட் திருவிழா

இந்தியாவில் நீண்ட நாட்களுக்கு பிறகு சர்வதேச கிரிக்கெட் திருவிழா களைகட்ட தொடங்கி விட்டது. அதுவும் சென்னை மண்ணில் இந்த திருவிழா தொடங்க இருப்பது கூடுதல் உற்சாகம்தான். வெறி கொண்ட கங்காருவை அதன் இடத்திலேயே பதம் பார்த்த கையோடு கெத்தாக இங்கிலாந்தை சந்திக்கிறது மென்&புளு. இலங்கையை அதன் மண்ணில் வீழ்த்துவது என்பது சாதாரண காரியமல்ல. இலங்கையை அதன் மண்ணிலேயே நசுக்கி விட்டு சேப்பாக் வந்திருக்கிறது இங்கிலாந்து.

சிக்கலில் கோலி

சிக்கலில் கோலி

ஆஸ்திரேலியாவை அவர்கள் கோட்டையில் வேட்டையாடியதன் மூலம் கிடைத்த புத்துணர்ச்சிதான் இந்திய அணிக்கும், கிரிக்கெட் வாரியத்துக்கும், தேர்வுக்குழுவுக்கும் பலம். ஆனால் இதுதான் இப்போது தேர்வுக்குழுவுக்கு தர்ம சங்கடத்தை உருவாக்கி உள்ளது. டெஸ்ட் அறிமுக பிளேயர்கள் ஒருசேர பார்மில் வந்துட அதுதான் இப்போது சிக்கலாக உள்ளது. பிளேயிங் லெவனில் யாரை சேர்ப்பது, யாரை உட்கார வைப்பது என்பது தேர்வு குழுவுக்கும், கேப்டன் கோலிக்கும் புது தலைவலியை ஏற்படுத்தி இருக்கிறது.

பிளேயிங் லெவன் குழப்பம்

பிளேயிங் லெவன் குழப்பம்

ஓப்பனிங்கில் ஹிட் மேன் ரோகித் சர்மா, இளம் புயல் சுப்மான் கில் அதில் சந்தேகமில்லை. கேப்டன் கிங் கோலி 3-வது, தடுப்பு சுவர் புஜாரா 4-வது அதில் மாற்றமில்லை. 5-வதில் நம்பிக்கை துணை கேப்டன் ரஹானே, 6-வதில் அதிரடி சூரன், விக்கெட் கீப்பர் ரிஷப பண்ட் என்பதில் மாற்று கருத்து இல்லை. இந்த 7 முதல் 11 இடம் வரைதான் தலைவலிக்கு காரணம். ஆல்ரவுண்டர் ஹார்திக் பாண்ட்யா 7-வது ஆடினால், மீதி 2 ஸ்பின், 2 பாஸ்ட் பவுலர் கொண்டுதான் களம் இறங்க முடியும். ஸ்பின்னரில் அஸ்வின் இடம் உறுதி.

ஹார்திக் பாண்ட்யாவுக்கு கஷ்டம்தான்

ஹார்திக் பாண்ட்யாவுக்கு கஷ்டம்தான்

குல்தீப் யாவுக்கும் இடம் கிடைத்து விடும். ஆனால் 3-வது ஸ்பின்னர் ஆஸியில் கலங்கிய வாஷிங்டன் சுந்தரா அல்லது அக்ஷர் பட்டேலா என்பதில் சிக்கல் உருவாகி இருக்கிறது. பாஸ்ட் டிபார்ட்மெண்டிலும் இதே பிரச்சினைதான். பும்ரா தலைமையில் ஆஸியை புரட்டியெடுத்த முகமது சிராஜ்க்கு வாய்ப்பா அல்லது அனுபவம் கொண்ட இஷாந்த் சார்மாவா இறங்குவாரா என்பதுதான் சிக்கலில் உள்ளது. 3-வது ஸ்பின்னர் கட்டாயம் தேவைப்படுவதால் ஹார்திக் பாண்ட்யாவை உட்கார வைத்து விட்டு வாஷிங்டன் சுந்தருக்கு வாய்ப்பு கொடுக்கலாம் என்று கூறப்படுகிறது.

இதுதான் பிளேயிங் லெவன்?

இதுதான் பிளேயிங் லெவன்?

மொத்தத்தில் நமது கணிப்புப்படி கீழே உள்ளதுபோல் பிளேயிங் லெவன் இடம்பெறலாம். சுப்மான் கில், ரோஹித் சர்மா, சேடேஷ்வர் புஜாரா, விராட் கோலி, அஜிங்க்யா ரஹானே, ரிஷாப் பண்ட்(விக்கெட் கீப்பர்) ரவிச்சந்திரன் அஸ்வின், ஹார்டிக் பாண்ட்யா / வாஷிங்டன் சுந்தர், ஜஸ்பிரீத் பும்ரா, குல்தீப் யாதவ், இஷாந்த் சர்மா

Story first published: Thursday, February 4, 2021, 15:50 [IST]
Other articles published on Feb 4, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+