Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இப்படியெல்லாமா ரன் சேர்ப்பது ?.. டென்ஷன் ஆன கோலி... நடுவர் வரை சென்ற பஞ்சாயத்து!

சென்னை: இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் போது, இங்கிலாந்து வீரர்களின் செயலால் விராட் கோலி அதிருப்தியடைந்த வீடியோ வைரலாகி வருகிறது.

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்திய அணி 227 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இதனால் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி 1 - 0 என்ற கணக்கில் முன்னிலை வகுக்கிறது.

தோல்வி குறித்து பேசிய இந்திய அணி கேப்டன் விராட் கோலி இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்திய பவுலிங் படை சரியாக செயல்பட வில்லை என கூறினார்.

 ஆதிக்கம்

ஆதிக்கம்

முதல் டெஸ்ட் போட்டியின் 5 நாட்களும் இங்கிலாந்து அணியின் ஆதிக்கமே தொடர்ந்து வந்தது. இந்திய அணி வீரர்கள் கடுமையாக போராடிய போதும் 2வது இன்னிங்சில் 192 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

 குற்றச்சாட்டு

குற்றச்சாட்டு

முதல் டெஸ்டின் 4ம் நாள் ஆட்டத்தின்போது இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் ரன்கள் எடுக்க களத்தில் நடுவே ஓடியுள்ளனர். இதனால் அதிருப்தியடைந்த இந்திய அணி கேப்டன் விராட் கோலி அப்போது களத்தில் இருந்த நடுவர் நிதின் மேனனிடம் ஹிந்தி மொழியில் குற்றம்சாட்டினார்.

இணையத்தில் வைரல்

இணையத்தில் வைரல்

முதல் டெஸ்டின் 4ம் நாள் ஆட்டத்தின் போது நடைபெற்ற இந்த சம்பவத்தின் ஆடியோ, ஸ்டம்ப் மைக்கில் பதிவாகியிருந்துள்ளது. இந்நிலையில் அது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

ஏமாற்றம்

ஏமாற்றம்

போட்டிக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய இந்திய பந்துவீச்சாளர் அஸ்வின் முதல் டெஸ்டில் பயன்படுத்தப்பட்ட பந்து மிகவும் விநோதமாக இருந்ததாகவும், இதுவரை இப்படிபட்ட மோசமான பந்தை பார்த்ததில்லை என குற்றம்சாட்டியுள்ளார்.

Story first published: Wednesday, February 10, 2021, 14:08 [IST]
Other articles published on Feb 10, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+