இந்திய அணியில் 2 அதிரடி மாற்றங்கள்.. உம்ரான் மாலிக்கிற்கு வாய்ப்பு..வங்கதேசத்தை எதிர்கொள்ள மெகா திட்டம்
டாக்கா : இந்தியா, வங்கதேச அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டி டாக்காவில் இன்று தொடங்கியது. முதல் ஆட்டத்தில் இந்தியா, தோல்வியை தழுவியதால், இன்றைய ஆட்டம் இந்திய அணிக்கு வாழ்வா சாவா என்ற கட்டத்தில் உள்ளது.
ஏற்கனவே கடந்த 2015 ஆம் ஆண்டு வங்கதேசத்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட இந்திய அணி 2க்கு1 என்ற கணக்கில் தொடரை இழந்தது. இதனால், வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி உள்ளது.
முதல் போட்டியில் விளையாடிய வேகப்பந்துவீச்சாளர் குல்தீப் சென்னுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இன்றைய ஆட்டத்தில் உம்ரான் மாலிக் சேர்க்கப்பட்டுள்ளார்.

2 மாற்றங்கள்
டாஸ் வென்ற வங்கதேச அணி, யாரும் எதிர்பாராத வகையில் பேட்டிங்கை முதலில் தேர்வு செய்தது. இது குறித்து பேசிய கேப்டன் ரோகித் சர்மா, முதலில் பந்துவீசுவதால், வங்கதேச அணியை குறைந்த ரன்களில் கட்டுப்படுத்தியே ஆக வேண்டும். இன்று, நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தியே தீர வேண்டும். இன்றைய ஆட்டத்தில் 2 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

திட்டம் என்ன
காயத்திலிருந்து குணமடைந்துள்ள அக்சர் பட்டேல் ஷாபாஸ் அகமது பதில் அணிக்கு திரும்பியுள்ளார். இதே போன்று உன் மாலிக் குல்தீப் சென்னுக்கு பதில் விளையாகிறார். நாங்கள் முதல்ஆட்டத்தில் தோல்வியை தழுவிய பிறகு, எங்கு தவறு செய்தோம் என்பது குறித்து பேசி ஆய்வு செய்தோம். சில பந்துவீச்சாளர்களை எப்படி கையாள வேண்டும் என்பது குறித்து திட்டமிட்டோம்.

ஆடுகளம் எப்படி?
நேற்று நல்ல பயிற்சி செய்தோம். நாங்கள் கற்று கொண்ட பாடத்தை இன்று நடைமுறைப்படுத்துவோம் என நம்புகிறேன். இன்றைய ஆட்டத்தில் வேறு ஆடுகளம் பயன்படுத்தப்படுகிறது. இன்றைய போட்டியில், பேட்டிங் கொஞ்சம் சவாலாக இருக்கும். களத்தில் கொஞ்ச நேரம் பேட்ஸ்மேன்கள் நேரத்தை செலவிட்டால் ரன்கள் நிச்சயம் கிடைக்கும்.

பிளேயிங் லெவன்
1,ரோகித் சர்மா 2, ஷிகர் தவான், 3, விராட் கோலி, 4, ஸ்ரேயாஸ் ஐயர், 5, கேஎல் ராகுல், 6, வாசிங்டன் சுந்தர், 7, அக்சர் பட்டேல், 8, தீபக் சாஹர், 9, 9. முகமது சிராஜ், 10, ஷர்துல் தாக்கூர், 11, உம்ரான் மாலிக்


Click it and Unblock the Notifications