For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

வங்கதேசத்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டி.. இந்திய அணியில் 2 மாற்றம்.. ரோகித் பதில் யார்?

டாக்கா : இந்திய வங்கதேச அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி நாளை காலை 11:30 மணிக்கு நடைபெறுகிறது.

இந்த தொடரில் இந்திய அணி ஏற்கனவே இரண்டுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் தோல்வியடைந்த நிலையில், கடைசி ஆட்டத்தில் வென்று ஆறுதல் வெற்றியை பெரும் முனைப்புடன் களமிறங்குகிறது.

மேலும் நாளைய ஆட்டத்தில் கேப்டன் ரோகித் சர்மா பங்கேற்க மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நாளைய ஆட்டத்தில் அணியில் இரண்டு முக்கிய மாற்றங்கள் நிகழ உள்ளது.

தீபக் சாஹருக்கு பதில் யார்?

தீபக் சாஹருக்கு பதில் யார்?

தீபக்சாஹர் பதிலாக வேறு எந்த வேகப்பந்துவீச்சாளரும் அணியில் இல்லை. கூடுதல் வீரராக இடம்பெற்றிருந்த குல்தீப் சென்னும் காயம் காரணமாக தொடர்ந்து வெளியேறி இருக்கிறார். தற்போது தீபக்சாஹரும் சென்று விட்டதால் முழு உடல் தகுதியுடன் சர்துல் தாக்கூர், உம்ரான் மாலிக், முகமது சிராஜ் ஆகிய மூன்று வேக பந்துவீச்சாளர் மட்டுமே இருக்கிறார்கள். இதனால் நாளைய ஆட்டத்தில் இந்திய அணி கூடுதலாக ஒரு சுழற் பந்துவீச்சாளரை சேர்த்துக்கொண்டு விளையாட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறது.

கேஎல் ராகுல் கேப்டன்

கேஎல் ராகுல் கேப்டன்

இதனால் ஷாபாஷ் அகமது இந்திய அணியின் பிளேயிங் லெவனுக்கு திரும்ப வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. ரோகித் சர்மா கடைசி ஆட்டத்தில் பங்கேற்க மாட்டார். இதனால் அவருக்கு பதில் கே எல் ராகுல் அணியை வழிநடத்துவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. ரோகித் சர்மாவுக்கு பதில் இஷான் கிஷனை தொடக்க வீரராக சேர்க்க அதிக வாய்ப்பு உள்ளது. ஷிகர் தவான், விராட் கோலி ,கேஎல் ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் பெரிய இன்னிங்ஸ் ஆடி ரன் குவித்தால் மட்டுமே இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு இருக்கும்.

வேகப்பந்துவீச்சாளர் குறை

வேகப்பந்துவீச்சாளர் குறை

பந்துவீச்சில் சிறப்பாக செயல்படும் வாஷிங்டன் சுந்தர் பேட்டிங்கில் தன்னுடைய திறமையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு இருக்கிறார். பந்துவீச்சில் இந்திய அணி தங்களுடைய யுத்தியை மாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஆரம்ப கட்டத்தில் சில ஓவர்களில் சிறப்பாக செயல்படும் இந்திய அணி வேகப்பந்துவீச்சாளர்கள், இறுதிக்கட்டத்தில் சொதப்பி வருகிறார்கள். குறிப்பாக கடைசி ஓவர்களில் ஒரு யாக்கர் கூட வீச முடியாத நிலையில் இந்திய அணி வீரர்கள் இருக்கிறார்கள்.

ஓயிட்வாஷ் தவிர்க்குமா இந்தியா?

ஓயிட்வாஷ் தவிர்க்குமா இந்தியா?

வங்கதேசம் அணியை பொறுத்தவரை பேட்டிங்கில் முன் வரிசை வீரர்கள் சொதப்பினாலும் மஹம்மதுல்லா, மேஹதி ஹசன் போன்ற வீரர்கள் தனி ஆளாக நின்று ஆட்டத்தை மாற்றி விடுகிறார்கள். அந்த அணியின் பந்துவீச்சும் அசுரபலத்தில் இருக்கிறது. இதனால் இந்தியாவுக்கு எதிராக தொடரை முழுமையாக கைப்பற்றி ஒயிட்வாஷ் செய்ய வேண்டிய உத்வேகத்தில் அந்த அணி வீரர்கள் இருக்கிறார்கள். ஒயிட்வாஷ் என்ற வெட்கக்கேட்டை இந்தியா தவிர்க்குமா என்று ரசிகர்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

Story first published: Friday, December 9, 2022, 12:20 [IST]
Other articles published on Dec 9, 2022
English summary
2 Big Forced changes for team india vs bangladesh 3rd odi 2022
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+