
தினேஷ் கார்த்திக் வர்ணனை
இதில் தினேஷ் கார்த்திக் தான் ஒரு சிறந்த கிரிக்கெட் வீரர் என்பதை தனது பேச்சு மூலம் நிரூபித்தார். இப்போது எல்லாம் கிரிக்கெட் வர்ணனையில் பலர் சொந்த கதைகள் சோக கதைகள் பேசி வரும் நிலையில், தினேஷ் கார்த்திக் ஒவ்வொரு விஷயங்களையும் அழகாக ரசிகர்களுக்கு எடுத்து உரைத்தார். மேலும் பந்தை விளையாடுவது குறித்தும் விக்கெட் கீப்பர் எப்படி பந்தை பிடிக்க வேண்டும் என்பது குறித்தும் அழகாக வர்ணனை செய்தார்.

முதல் கணிப்பு
இந்த நிலையில் இந்திய அணி முதல் நாள் ஆட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோதே தினேஷ் கார்த்திக் இந்தியா இந்த ஆட்டத்தில் ஒரு முறை தான் பேட்டிங் விளையாடும். இரண்டாவது முறை பேட்டிங் செய்ய வாய்ப்பு இருக்காது என்று கூறினார். அப்போது மற்ற வர்ணனையாளர்கள் இது முன்கூட்டியே கணிக்கப்படுவது தவறு.பொறுத்திருந்து நீங்கள் கணித்திருக்கலாம், தவறு செய்து விட்டீர்கள் கார்த்திக் என்று கூறினர்.

ஸ்விப் ஷாட்
ஆனால் தினேஷ் கார்த்திக் சொன்னது போல் இந்திய அணி ஒருமுறை மட்டுமே பேட்டிங் விளையாடியது. இதனை ஆஸ்திரேலிய வீரர் மார்க் வாக் தினேஷ் கார்த்திக்கின் இந்த சரியான கணிப்பு பல காலத்திற்கு ரசிகர்களால் பேசப்படும் என பாராட்டினார். இதேபோன்று ஆஸ்திரேலிய அணியின் இரண்டாவது இன்னிங்ஸின்போது அலெக்ஸ் கேரி ஸ்வீப் ஷாட்களை ஆடி இரண்டு பவுண்டரிகளை அடித்தார்.

இரண்டாவது கணிப்பு
அப்போது அவர் பேட்டிங் செய்து கொண்டிருக்கும் போது அலெக்ஸ் கேரி இதே ஷாட்டால்தான் ஆட்டம் இழப்பார் என்று கூறினார். அதேபோல் அஸ்வின் பந்தை அவர் ஸ்வீப் செய்யும்போது எல்பிடபிள்யூ ஆனார். இதனை குறிப்பிட்ட ரவி சாஸ்திரி தினேஷ் கார்த்திக்கின் ஆருடம் பலித்து விட்டது என்று பாராட்டினார். இதேபோன்று தினேஷ் கார்த்திக் இந்திய அணி இந்த தொடரை எளிதாக வென்று விடும் என்று கூறியிருக்கிறார் .அது உண்மையாக இருந்ததா என்பதை காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.


Click it and Unblock the Notifications











