Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மனைவி ஏமாற்றிய பிறகும் சாதித்த 2 கிரிக்கெட் வீரர்கள்.. கூட இருந்த கிரிக்கெட் வீரரையே மணந்து துரோகம்

சென்னை : கிரிக்கெட் வீரர்கள் என்றால் ஒரு அணியாக ஒரு குடும்பமாக இருப்பார்கள் என்பது நம் அனைவருக்கும் தெரிந்தது தான். ஆனால் அப்படிப்பட்ட குடும்பத்தில் சில தகாத விஷயங்கள் நடந்தால் ஒட்டுமொத்த வீரர்களின் நம்பிக்கையே உடைந்து விடும்.

அப்படிப்பட்ட நம்பிக்கை துரோகத்திற்கு பிறகும் இரண்டு கிரிக்கெட் வீரர்கள் தங்களுடைய வாழ்க்கையில் வெற்றி பெற்றிருக்கிறார்கள். அவர்கள் யார் என்று தான் தற்போது பார்க்க உள்ளோம்.

2 Cricketers Who cheated by their wife but shinned in their carrier

இந்திய அணியில் பல ஆண்டுகளாக விளையாடி வந்தவர் தமிழகத்தைச் சேர்ந்த தினேஷ் கார்த்திக். தினேஷ் கார்த்திக்கிற்கு நிகிதா என்ற மனைவி இருந்தார். இந்திய அணியில் விளையாடும்போதெல்லாம் நிகிதாவும் தினேஷ் கார்த்திக் உடன் கூட இருந்தார். அப்போது அணியில் இருந்த முரளி விஜய், தினேஷ் கார்த்திக்கிற்கு துரோகம் செய்தார்.

அதன் பின்னர் தினேஷ் கார்த்திக்கை விட்டு பிரிந்த மனைவி நிகிதா தற்போது முரளி விஜய்யுடன் வாழ்ந்து வருகிறார். இதனால் துவண்டு போகாத தினேஷ் கார்த்திக் பிரபல ஸ்குவாஷ் வீராங்கனை தீபிகா பல்லிக்கல்லை திருமணம் செய்து கொண்டு தற்போது வாழ்க்கையில் வெற்றி பெற்றிருக்கிறார். அணியிலிருந்து நீக்கப்பட்ட தினேஷ் கார்த்திக் இரண்டாவது திருமணம் செய்த பிறகு தான் பல்வேறு சாதனைகளை படைத்தார்.

இதேபோன்று ஒரு கதை நமது பக்கத்து நாடான இலங்கையிலும் நடந்தது. இலங்கையின் அதிரடி தொடக்க வீரராக திலகரத்னே தில்ஷான் இருந்தார். அவருக்கு நிலங்கா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் தில்சானை விட்டு பிரிந்த நிலங்கா மீண்டும் தில்ஷனுடன் களமிறங்கும் உபுல் தாரங்காவை திருமணம் செய்து கொண்டார்.

தமக்கு உபுல் தரங்கா துரோகம் செய்துவிட்டார் என்று தில்ஷான் மனம் வருந்தினாலும், நாட்டிற்காக இருவரும் தொடக்க வீரராக பலமுறை அதன் பிறகு களம் இறங்கினர். மேலும் தில்சான் தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் கவனம் செலுத்தி பல வெற்றிகளை பெற்றார்.

Story first published: Thursday, June 22, 2023, 14:02 [IST]
Other articles published on Jun 22, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+