Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

2 வீரர்களிடையே கடும் போட்டி.. முதல் ஒருநாள் போட்டி மூலம் உலகக்கோப்பை வாய்ப்பு..எகிறும் எதிர்பார்ப்பு

லக்னோ: தென்னாப்பிரிக்காவுடனான ஒருநாள் தொடரில் 2 வீரர்கள் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

இந்தியா - தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் இன்று தொடங்குகிறது.

டி20 தொடரை 2 - 1 என இந்தியா கைப்பற்றிவிட்ட நிலையில் ஒருநாள் தொடரையும் கைப்பற்றும் முனைப்புடன் களமிறங்குகிறது.

தென்னாப்பிரிக்க தொடர்

தென்னாப்பிரிக்க தொடர்

ரோகித் சர்மா தலைமையிலான இந்தியாவின் மெயின் அணி டி20 உலகக்கோப்பைக்காக ஆஸ்திரேலியா புறப்பட்டுவிட்டது. இதனால் ஒருநாள் தொடருக்காக ஷிகர் தவான் தலைமையில் இளம் வீரர்கள் கொண்ட புதிய அணியை உருவாக்கியுள்ளனர். இந்தியாவின் ஏ அணி போட்டியாக இருந்தாலும், இதன் மீது பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதற்கு காரணம் 2 ஸ்டார் வீரர்கள் தான்.

என்ன காரணம்

என்ன காரணம்

டி20 உலகக்கோப்பைக்கான அணியில் காயம் காரணமாக விலகிய ஜஸ்பிரித் பும்ராவுக்கு மாற்று வீரர் இன்னும் அறிவிக்கப்படவில்லை. கொரோனாவால் பாதிக்கப்பட்டு பெங்களூருவில் உள்ள முகமது ஷமி குறித்தும் எந்தவித தகவலும் இல்லை. இதனால் தற்போது முகமது சிராஜ் - தீபக் சஹார் இடையே தான் கடும் போட்டி நிலவி வருகிறது.

நீடிக்கும் குழப்பங்கள்

நீடிக்கும் குழப்பங்கள்

தென்னாப்பிரிக்க தொடரில் பேட்டிங், பவுலிங் என மிகச்சிறப்பாக செயல்பட்டிருந்தார் தீபக் சஹார். மற்றொரு புறம் பாதியில் வந்த முகமது சிராஜ் அதிக ரன்களை வாரி வழங்கியிருந்தார். ஆனால் ஆஸ்திரேலிய களத்தில் சிராஜ் போன்று 145+ வேகத்தில் வீசக்கூடியவர் தான் தேவை. எனவே இந்த ஒருநாள் போட்டியில் தான் இருவரில் யாருக்கு வாய்ப்பு என்பதை நிரூபிக்க வேண்டும்.

 ப்ளேயிங் 11ல் உறுதி

ப்ளேயிங் 11ல் உறுதி

இதற்காகவே 3 ஒருநாள் போட்டிகளிலும் ப்ளேயிங் 11ல் தீபக் சஹார் மற்றும் முகமது சிராஜ் இருவருமே சேர்க்கப்படவுள்ளனர். இவர்கள் தங்களது வேகம், ஸ்விங், பவுன்ஸ், பேட்டிங் திறமை என அனைத்தையும் நிரூபித்துக்காட்ட வேண்டும் என பிசிசிஐ தரப்பில் இருந்து சுற்றறிக்கை விடப்பட்டுள்ளது.

Story first published: Thursday, October 6, 2022, 16:42 [IST]
Other articles published on Oct 6, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+