For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இரண்டே விஷயம் தான்.. தென்னாப்பிரிக்காவை வீழ்த்த இந்தியா இதை செய்தால் போது.. டெல்லி பிட்ச்-ன் லாஜிக்!

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 2 விஷயங்களை செய்தால் வெற்றி பெறலாம்.

இரு அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் இன்று முதல் தொடங்குகிறது.

முதல் டி20 போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் இன்று இரவு 7 நடைபெறவிருக்கிறது.

 முதல் டி20 போட்டி

முதல் டி20 போட்டி

இந்த போட்டியில் இந்திய அணிக்கு தொடக்கமே பின்னடைவாக தான் உள்ளது. ரோகித், விராட் கோலி உள்ளிட்ட முன்னணி வீரர்கள் இல்லை. நேற்று திடீரென கேப்டன் கே.எல்.ராகுலும் காயம் காரணமாக வெளியேறினார். இதனால் ரிஷப் பண்ட் தலைமையில் ஐபிஎல் தொடரில் கலக்கிய வீரர்கள் தான் முழு பொறுப்பையும் ஏற்று ஆட வேண்டும்.

ஃபுல் ஃபார்ம்

ஃபுல் ஃபார்ம்

மற்றொருபுறம் தென்னாப்பிரிக்க அணி முழு பலத்தில் உள்ளது. அந்த அணியில் குயிண்டன் டிக்காக், எய்டன் மர்க்ரம், வாண்டர் டுசன் ஆகியோர் பேட்டிங்கிலும், பவுலிங்கில் மார்க்கோ யான்சன், டுவைன் பிரிட்டோரியஸ் ஆகியோர் ஐபிஎல் தொடரில் அட்டகாசமாக பந்துவீசினர். கிட்டத்தட்ட பேட்டிங் மற்றும் பவுலிங் என சரிசமமான போட்டியில் உள்ளது.

 சுழற்பந்துவீச்சு

சுழற்பந்துவீச்சு

இந்நிலையில் இந்திய அணி வெற்றி பெறுவதற்கு 2 விஷயங்கள் செய்தால் போதும். போட்டி நடைபெறும் அருண் ஜெட்லி மைதானத்தில், சுழற்பந்துவீச்சுக்கு தான் சாதமாக இருக்கும். இந்திய அணியின் பலமும் அதுதான். வேகப்பந்துவீச்சிலும், புவனேஷ்வர்குமார் மட்டுமே அனுபவ வீரராக உள்ளார். எனவே அக்‌ஷர் பட்டேல், யுவேந்திர சாஹல் ஆகியோர் தங்களது முழு திறமையையும் காட்டி எதிரணியை சுருட்ட வேண்டும்.

Recommended Video

IND vs SA 1st T20 போட்டியில் India வீரர்கள் அபாரம் *Cricket
ஸ்கோர் போர்ட்

ஸ்கோர் போர்ட்

அருண் ஜெட்லி மைதானத்தில் இதுவரை 6 சர்வதேச டி20 போட்டிகளே நடைபெற்றுள்ளது. இங்கு பேட்டிங் செய்வது கடினம் என்பதால் 160 ரன்கள் என்பதே வெற்றி பெற சிறப்பான ஸ்கோர் ஆகும். எனவே முதலில் பேட்டிங் செய்யும் அணி 160+ ரன்கள் எடுத்தால் சுலபமாக எதிரணியை கட்டுப்படுத்தலாம். அல்லது 2வது பேட்டிங் செய்யும் அணி குறைந்த ஸ்கோருக்குள் சுருட்ட வேண்டும்.

Story first published: Thursday, June 9, 2022, 17:30 [IST]
Other articles published on Jun 9, 2022
English summary
IND vs SA series ( இந்தியா vs தென்னாப்பிரிக்க டி20 போட்டி ) இந்தியா vs தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற 2 விஷயங்களை செய்ய வேண்டும்.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+