Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

2 அதிரடி வீரர்களால் கடுப்பான டிராவிட்.. உலககோப்பை கனவு அவ்வளவு தானா? முதல் வாய்ப்பும் வீண்

டிரிண்டாட்: வரும் அக்டோபர் மாதம் நடைபெறும் டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியை தயாரிக்கும் இறுதிக் கட்ட பணி தற்போது தொடங்கிவிட்டது.

Recommended Video

IND vs WI 1st T20 போட்டி தான் T20 World Cup ஒத்திகை? *Cricket

இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 5 டி20 போட்டி கொண்ட தொடர் பெரும் முக்கியத்துவம் வாய்ந்தததாக கருதப்படுகிறது.

இந்த நிலையில், இந்திய அணியின் பிளேயிங் லெவனில் ஒவ்வொரு வீரர்களுக்கும் கடும் போட்டி நிலவுகிறது. பலர் வாய்ப்புக்காக காத்துள்ளனர்.

வாய்ப்பு

வாய்ப்பு

ஆனால் கிடைத்த வாய்ப்பை கோட்டை விடுவதை என்ன வென்று சொல்வது. கிரிக்கெட்டின் பிதாமகன் சச்சினுக்கும் சரி, தற்போதைய கேப்டன் ரோகித் சர்மாவும் சரி, அவர்களுடைய வாழ்க்கையே, நடுவரிசையிலிருந்த தொடக்க வீரராக புரோமோஷன் பெற்ற போது தான் மாறியது,இந்த நிலையில், கடந்த 5 போட்டிகளாக சொதப்பிய சூர்யகுமார் யாதவ்க்கு தொடக்க வீரர் பொறுப்பு வழங்கப்பட்டது.

சொதப்பல்

சொதப்பல்

இதில், சூர்யகுமார் யாதவ் 16 பந்துகளில் 24 ரன்கள் அடித்தார். இதில் 3 பவுண்டரிகளும், ஒரு சிக்சரும் அடங்கும். ஆனால் இந்த 16 பந்தகளில் கிட்டதட்ட 3 முறை அவர் ஆட்டமிழந்து இருப்பார். அந்த வகையில், அவர் அடித்த பந்து எல்லாம் எதிரணி வீராகள் கேட்ச் பிடிக்கும் அளவிலேயே இருந்தது.

வரப்பிரசாதம்

வரப்பிரசாதம்

டி20 கிரிக்கெட்டில் பவர்பிளேவில் முதல் 6 ஓவரில் பவுண்டரி கோட்டில் மொத்தமே 2 வீரர்கள் தான் இருப்பார்கள். இதனால், பந்தை சரியாக தூக்கி அடித்தால் சிக்சர், பவுண்டரி என ரன்கள் கிடைக்கும். அதிரடியாக ஆடக் கூடியவர்களுக்கு அந்த வாய்ப்பு வரப்பிரசாதம் மாதிரி. ஆனால், அதனையும் சூர்யகுமார் பயன்படுத்தி கொள்ளவில்லை.

டக் அவுட்

டக் அவுட்

இதே போன்று விராட் கோலி இல்லாததால் அந்த இடத்துக்கு ஸ்ரேயாஸ் மற்றும் தீபக் ஹூடா போட்டி போடுகின்றனர். சீனியர் என்ற அடிப்படையில் ஸ்ரேயா1 ஐயருக்க வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் அவர் 4 பந்துகளை எதிர்கொண்டு டக் அவுட்டாகி விட்டார். இதனால் டி20 உலகக் கோப்பை தொடருக்கு இவ்விருவருக்கும் இருந்து வாய்ப்பு கை நழுவி செல்கிறது.

Story first published: Friday, July 29, 2022, 21:28 [IST]
Other articles published on Jul 29, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+