For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

2 இந்திய வீரர்களுக்கு விசா தர ஆஸி. மறுப்பு? உம்ரான் மாலிக்கிற்கு நிகழ்ந்த சோகம்.. என்ன நடந்தது?

மும்பை: டி20 உலககோப்பை தொடரில் பங்கேற்க செல்ல இருந்த 2 இந்திய வீரர்களுக்கு ஆஸ்திரேலியா விசா தர மறுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

டி20 உலககோப்பை தொடரில் பங்கேற்பதற்காக 15 மெயின் வீரர்களை கொண்ட அணியும், 4 ரிசர்வ் வீரர்கள் கொண்ட வீரர்களையும், இளம் வீரர்கள் சிலரையும் இந்தியா அனுப்ப திட்டமிட்டது.

உலககோப்பைக்கு முன் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடர் நடைபெற இருந்ததால், 4 ரிசர்வ் வீரர்களை இந்தியா அனுப்பவில்லை.

மாற்று வீரர்கள்

மாற்று வீரர்கள்

இந்த நிலையில், பும்ராவுக்கு காயம் ஏற்பட்டதால் அவர் ஆஸ்திரேலியா புறப்படவில்லை. இதனைத் தொடர்ந்து மாற்று வீரராக முகமது ஷமி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், ரிசர்வ் வீரரான தீபக் சாஹருக்கு காயம் ஏற்பட்டதால், அவரும் ஆஸ்திரேலியா செல்லவில்லை. ஏற்கனவே ரிசர்வ் அணியில் இருந்த முகமது ஷமி மெயின் அணிக்கு சென்றதால், முகமது சிராஜையும், தீபக் சாஹருக்கு பதிலாக ஷர்துல் தாக்கூரையும் பிசிசிஐ அறிவித்தது.

பிசிசிஐ திட்டம்

பிசிசிஐ திட்டம்

இதே போன்று ரிசர்வ் வீரராக அறிவிக்கப்பட்ட ஸ்ரேயாஸ் ஐயரும், ஆஸ்திரேலியா புறப்படவில்லை. ஏற்கனவே அணியில் தீபக் ஹூடா, ரிஷப் பண்ட் உள்ளதால், ஸ்ரேயாஸ் ஐயருக்கு தேவை இருக்காது என்று முடிவு எடுக்கப்பட்டது. இதனால் அவருக்கு பதிலாக உம்ரான் மாலிக்கையும், ரவி பிஸ்னாய்க்கு பதிலாக குல்தீப் யாதவையும் அனுப்ப பிசிசிஐ திட்டமிட்டது.

வாய்ப்பு பறிப்போனது

வாய்ப்பு பறிப்போனது

எனினும், இவ்விரு வீரர்களும் கடைசி கட்டத்தில் விண்ணப்பித்ததால், ஆஸ்திரேலியா விசா வழங்கவில்லை. இதனால் உம்ரான் மாலிக்கும், குல்தீப் யாதவும் ஆஸ்திரேலியா செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனிடையே, போட்டி நடைபெறும் போது வேறு ஏதாவது பேட்ஸ்மேனுக்கு காயம் ஏற்பட்டால் ஸ்ரேயாஸ் ஐயர் ஆஸ்திரேலியா செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

யார் மீது தவறு?

யார் மீது தவறு?

பிசிசிஐயின் தவறு காரணமாக உம்ரான் மாலிக்கிற்கும், குல்தீப் யாதவுக்கும் விசா கிடைக்கவில்லை என்றும், இதில் ஆஸ்திரேலியாவின் தவறு ஏதும் இல்லை என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே பிரபல டென்னிஸ் வீரர் ஜோகோவிச்சுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தவில்லை என்பதற்காக திருப்பி அனுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Story first published: Sunday, October 16, 2022, 21:06 [IST]
Other articles published on Oct 16, 2022
English summary
2 Indian cricketer facing visa issues to play in t20 world cup 2 இந்திய வீரர்களுக்கு விசா தர ஆஸி. மறுப்பு? உம்ரான் மாலிக்கிற்கு நிகழ்ந்த சோகம்.. என்ன நடந்தது?
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+