Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

2 அறிமுக வீரர்களுக்கு இந்திய அணியில் வாய்ப்பு..டாஸ் குறித்து ஹர்திக் ஷாக் பதில்..தமிழக வீரர் நீக்கம்

மும்பை : இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டி20போட்டி மும்பையில் இன்று தொடங்கியது. முதல் முறையாக ஹர்திக் பாண்டியா சொந்த மண்ணில் கேப்டனாக இந்திய அணிக்கு செயல்படுகிறார்.

மும்பை வான்கடே மைதானம் ரன் குவிப்புக்கு சாதகமாக கருதப்படுகிறது. எனினும் பனிப்பொழிவு இருக்கும் என்பதால் இரண்டாவது பேட்டிங் செய்யும் அணிக்கே சாதகமாக இருக்கும்.

இந்திய மண்ணில் இதுவரை இலங்கை அணி 13 முறை டி20 போட்டியில் மோதி இருக்கிறது. இதில் இந்திய அணி 11 போட்டியிலும், இலங்கை அணி 2 போட்டியிலும் வெற்றி பெற்று இருக்கிறது.

நேருக்கு நேர்

நேருக்கு நேர்

இதே போன்று கடைசியாக இந்திய மண்ணில் விளையாடிய 5 டி20 போட்டியிலும் இல்ங்கை அணி தோல்வியை தழுவி இருக்கிறது. இந்திய மண்ணில் இலங்கை அணி கடைசியாக 2016ஆம் ஆண்டு தான் வென்று இருக்கிறது. மும்பை வான்கடே மைதானத்தில் ஒரு பகுதியில் பவுண்டரி எல்லை மிகவும் சிறியதாக 58 மீட்டர் தான் இருப்பதால், பந்துவீச்சாளர்கள் பாவம் தான்.

டாஸ்

டாஸ்

இந்திய அணியில் இன்றைய ஆட்டத்தில் சுப்மான் கில், சிவம் மவி ஆகியோர் டி20 கிரிக்கெட்டில் அறிமுக வீரராக களமிறங்குகின்றனர். தமிழக ஆல்ரவுண்டர் வாசிங்டன் சுந்தர் நீக்கப்பட்டு, தீபக் ஹூடாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி, முதலில் பந்தவீச்சை தேர்வு செய்தது. பனிப் பொழிவு காரணமாக இந்த முடிவை எடுத்ததாக ஷனாகா குறிப்பிட்டுள்ளார்.

ஹர்திக் பேச்சு

ஹர்திக் பேச்சு

இதனைத் தொடர்ந்து பேசிய ஹர்திக் பாண்டியா, தாம் பேட்டிங் செய்ய தான் முதலில் இருந்தேன். இருத் தரப்பு தொடரில் சவால்கள் இருக்க வேண்டும் என்பதால் இந்த முடிவை தான் எடுக்க இருந்தேன். ஆர்ஸ்தீப் சிங் காயம் காரணமாக இடம்பெறவில்லை என்று அவர் கூறினார்.

பிளேயிங் லெவன்

பிளேயிங் லெவன்

1, சுப்மான் கில் 2, இஷான் கிஷன், 3, சூர்யகுமார் யாதவ், 4, தீபக் ஹூடா, 5, ஹர்திக் பாண்டியா, 6, சஞ்சு சாம்சன், 7, அக்சர் பட்டேல், 8, ஹர்சல் பட்டேல், 9, சாஹல், 10, சிவம் மவி, 11, உம்ரான் மாலிக்

Story first published: Tuesday, January 3, 2023, 18:58 [IST]
Other articles published on Jan 3, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+