Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஜனவரி மாதத்திற்கான ஐசிசி சிறந்த வீரர் விருது.. 2 இந்தியர்கள் கடும் போட்டி..யாருக்கு வாய்ப்பு?

துபாய் : எந்த ஒரு திறமையையும் பாராட்டி ஊக்குவித்து கௌரவ படுத்தினால் அதன் மீது உள்ள ஆர்வம் பல மடங்கு அதிகமாகும்..

அந்த வகையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஐசிசி கிரிக்கெட் வீரர்களை பாராட்டி கௌரவிக்கும் வகையில் ஒவ்வொரு மாதமும் சிறப்பாக விளையாடும் 3 கிரிக்கெட் வீரர்களை தேர்வு செய்து பாராட்டி விருது கொடுத்து கௌரவித்து வருகிறது.

அதேபோல் கடந்த ஜனவரி மாதத்திற்கும் ஐசிசி சிறந்த மூன்று வீரர்களை தேர்வு செய்திருக்கிறது. இது சுவாரஸ்யம் என்னவென்றால் தேர்வான மூன்று வீரர்களின் இரண்டு வீரர்கள் இந்திய வீரர்கள் ஆவார்கள்.

சுப்மன் கில்

சுப்மன் கில்

இந்தியாவின் சுப்மன் கில் ,முகமது சிராஜ் மற்றும் நியூசிலாந்தை சேர்ந்த டேவான் கான்வேஆகியோர் ஜனவரி மாதத்திற்கான சிறந்த வீரர்களின் பட்டியலில் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்கள்.இளம் வீரரான சுப்மன் கில் இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் ஆவார். ஒரு நாள் தொடரில் இரட்டை சதமும், டி20 யில் சதமும் நியூசிலாந்து அணிக்கு எதிராக அடித்து பல பாராட்டுகளைப் பெற்றார்.

 முகமது சிராஜ்

முகமது சிராஜ்

அதேபோல முஹமது சிராஜும் இந்திய அணியின் மிகச்சிறந்த பந்துவீச்சாளராக விளங்கி வருகிறார். இவர் இந்திய அணியின் பும்ரா இல்லாத குறையை தீர்த்து சிறப்பாக விளையாடி வருகிறார். நியூசிலாந்திற்கு எதிராக தொடரில் அபாரமாக செயல்பட்டதன் மூலம் ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசையில் நம்பர் ஒன் வந்து இடத்தை பெற்றார். தற்போது சிராஜூம், ஐசிசி ஜனவரி மாதத்திற்கான சிறந்த வீரர் போட்டியில் இருக்கிறார்.

டிவோன் கான்வே

டிவோன் கான்வே

இந்த பட்டியலில் 3வது வீரராக நியூசிலாந்து வீரரும், சி எஸ் கேவை சேர்ந்த கான்வே இருக்கிறார். பாகிஸ்தானில் நடந்த டெஸ்ட் மற்றும் ஒரு நாள் தொடரில் மூன்று சதமும் இரண்டு அரை சதமும் அடித்து விளையாடிய நியூசிலாந்தின் கான்வே இந்திய தொடரிலும் ஜொலித்தார்.இவ்வாறான செயல்களால் இந்த பட்டியலில் இடம்பெறுவதற்கு இந்த மூன்று வீரர்களும் மிகச்சிறந்த தகுதியாளர்களாக உள்ளனர்.

வீராங்கனைகளுக்கு விருது

வீராங்கனைகளுக்கு விருது

இதில் ஜனவரி மாதத்தில் மட்டும் 600 ரன்களுக்கு மேல் குவித்த சுமங்கில் சிறந்த வீரராக வருவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக ரசிகர்கள் கருதுகின்றனர்.மேலும் இதே போல ஜனவரி மாதத்திற்கான சிறந்த வீராங்கனை விருதுக்கு ஆஸ்திரேலியாவின் பெத் மூனி, போப்பே லிட்ச்பீல்ட் மற்றும் இங்கிலாந்தின் கிரேஸ் ஸ்க்ரிவன்ஸ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

Story first published: Tuesday, February 7, 2023, 22:36 [IST]
Other articles published on Feb 7, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+