Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தீபக் சாஹர் இல்ல..மற்றொரு சிஎஸ்கே வீரருக்கு ஆஸி. வர அழைப்பு.. இந்திய அணியுடன் இணைந்தார்..என்ன பிளான்

பெர்த்: டி20 உலககோப்பை தொடருக்கான இந்திய அணி ஆஸ்திரேலியாவில் உள்ள பெர்த் நகரில் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

தென்னாப்பிரிக்கா தொடரில் விளையாடுவதற்காக டி20 உலககோப்பையில் ரிசர்வ் வீரராக அறிவிக்கப்பட்ட ஸ்ரேயாஸ் ஐயர், தீபக் சாஹர், ரவி பிஸ்னாய் ஆகியோர் இன்னும் ஆஸ்திரேலியா வரவில்லை.

இந்த நிலையில், தீபக் சாஹருக்கு காயம் ஏற்பட்டுள்ளதால், அவர் இந்திய அணியில் அவர் விளையாடுவதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

2 வீரர்களுக்கு அழைப்பு

2 வீரர்களுக்கு அழைப்பு

இதனிடையே, டி20 உலககோப்பை தொடருக்காக இந்திய அணியுடன் வந்து பயிற்சி செய்யும் படி 2 இந்திய வீரர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் தொடரில் கலக்கிய சிஎஸ்கே வீரர் முகேஷ் சௌத்ரிக்கும், சேத்தன் சக்கரியாவும் தற்போது இந்திய அணியுடன் பெர்த் நகருக்கு சென்று பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

காரணம்

காரணம்

முகேஷ் சௌத்ரி பந்தை நன்றாக ஸ்விங் செய்வதோடு, அவருடைய பந்த நன்கு பவுன்ஸ் ஆகும். சேத்தன் சக்காரியா பந்தை வேகமாக வீசக்கூடியவர்கள். இதனால்,இவ்விருவரின் பந்துவீச்சையும் இந்திய வீரர்கள் வலைப் பயிற்சியில் எதிர்கொண்டால் , அது நல்ல அனுபவமாக இருக்கும். மேலும் கூடுதல் பந்துவீச்சாளர்கள் இருந்தால் ஒரே நேரத்தில் 7 பேட்ஸ்மேன்கள் பயிற்சி மேற்கொள்ளலாம்.

பயிற்சி

பயிற்சி

இதே போன்று இந்திய அணியின் அடுத்த தலைமுறை வேகப்பந்துவீச்சாளர்களான முகேஷ் சௌத்ரி மற்றும் சேத்தன் சக்கரியாவுக்கு ஆஸ்திரேலியாவில் பயிற்சி செய்யும் வாய்ப்பு கிடைக்கும். இதனிடையே, டி20 உலககோப்பை தொடருக்கு தயாராகும் வகையில் இந்திய அணி வரும் 10ஆம் தேதி முதல் பயிற்சி ஆட்டத்தில் வெஸ்டர்ன் ஆஸ்திரேலியாவுடன் பங்கேற்கிறது.

இந்திய அணிக்குள் பயிற்சி

இந்திய அணிக்குள் பயிற்சி

அந்த தொடருக்கு தயாராகும் முன்பு, இந்திய அணி தங்களுக்குள்ளே ஒர போட்டியை நடத்த திட்டமிட்டுள்ளனர். இதற்கு முகேஷ் சௌத்ரியும், சேத்தன் கக்கரியாவும் முக்கிய வீரர்களாக இருப்பார்கள். இதில் என்ன ஒரு காமெடி என்றால், நம்ம லோக்கலில் ஆள் பற்றவில்லை என்றால் டபுள் சைடு போட்டு விளையாடுவோமே? அதே போல் சில வீரர்கள் இரண்டு அணிக்கும் விளையாட வகையில் நாளை பயிற்சி ஆட்டம் நடைபெற உள்ளது.

Story first published: Saturday, October 8, 2022, 13:31 [IST]
Other articles published on Oct 8, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+