Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

எங்களுக்கு பயம் இல்லை....இணையும் 2 புயல்கள்.... 2வது டெஸ்டில் ஜோ ரூட்டின் வியூகம்!

சென்னை: இங்கிலாந்து அணி அதிரடி மாற்றங்களுடன் 2வது டெஸ்ட் போட்டியில் சிறப்பாக செயல்படும் என ஜோ ரூட் தெரிவித்துள்ளார்.

முதல் டெஸ்டில் இந்திய அணி 227 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. இதனால் பழி தீர்க்க வேண்டும் என இந்தியாவும், முன்னிலை பெற வேண்டும் என இங்கிலாந்தும் முனைப்புடன் உள்ளது.

இந்நிலையில் இங்கிலாந்து அணியில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் மற்றும் வியூகங்கள் குறித்து அந்த அணி கேப்டன் ஜோ ரூட் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஆர்ச்சர் விலகல்

ஆர்ச்சர் விலகல்

இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இருந்து ஜோப்ரா ஆர்ச்சர் காயம் காரணமாக விலகியுள்ளார். வலைப்பயிற்சியின் போது தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் விலகியுள்ளார். அவருக்கு பதிலாக ஸ்டூவர்ட் பிராட் பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பட்லர் இல்லை

பட்லர் இல்லை

அதே போல இங்கிலாந்து அணியின் விக்கெட் கீப்பர் ஜாஸ் பட்லர் ஓய்வெடுப்பதற்காக சொந்த நாட்டிற்கு பறந்துள்ளார். இதனால் அவருக்கு பதிலாக பென் ஃபோக்ஸ் 2வது டெஸ்டில் விக்கெட் கீப்பராக செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வியூகம்

வியூகம்

அணி மாற்றங்கள் குறித்து பேசியுள்ள ஜோ ரூட், சென்னை போன்ற களத்தில் நாங்கள் தொடர்ந்து எங்கள் ஆட்டத்தை மெருகேற்றி வருகிறோம். இந்த சூழ்நிலைகளை பழகிக்கொண்டு, பயமில்லாமல் 2வது டெஸ்டிலும் வெற்றி பெற எங்களை மேலும் தயார்ப்படுத்தி வருகிறோம் என தெரிவித்துள்ளார்.

இணையும் புயல்கள்

இணையும் புயல்கள்

2வது டெஸ்டின் போது இங்கிலாந்து அணியில் ஆண்டர்சன் மற்றும் ஸ்டுவர்ட் பிராட் ஆகியோ இணையவுள்ளனர். அணியில் புதிதாக சேரும் ஸ்டூவர்ட் பிராட், ஒரு ஆட்டத்தின் நுட்பம் தெரிந்தவர் என்றும் அணிக்கு என்ன தேவையோ அதை முடிந்தவரை செய்து தாக்கத்தை ஏற்படுத்துவார் என்றும் ஜோ ரூட் தெரிவித்துள்ளார்.

Story first published: Friday, February 12, 2021, 16:54 [IST]
Other articles published on Feb 12, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+