Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஒரு நல்ல செய்தி.. 2 வீரர்கள் காயத்திலிருந்து திரும்பினர்.. செம தூள்

மும்பை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு சேப்பாக்கம் மைதானத்தில் விளையாட உள்ளது. கடந்த சீசனில் சென்னை அணி ஒன்பதாவது இடத்தை பிடித்து படுதோல்வியை தழுவியது.

இந்த நிலையில் தோனி தனது கடைசி சீசனில் விளையாடுகிறார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இம்முறை எப்படியாவது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பையை வெல்ல வேண்டுமென ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

இதேபோன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ள அதிரடி ஆல்ரவுண்டர் பென்ஸ் ஸ்டோக்ஸ் தொடர் முழுவதும் விளையாட இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.

பெரும் பின்னடைவு

பெரும் பின்னடைவு

இது பெரும் பலமாக பார்க்கப்படுகிறது. கடந்த முறை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வி அடைந்ததற்கு காரணமே முக்கிய வீரர்கள் காயம் காரணமாக விலகியதால் தான். 14 கோடி ரூபாய்க்கு மேல் கொடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வாங்கிய வேகப்பந்துவீச்சாளர் தீபக்சாகர் கடந்த சீசனில் ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை. இது சென்னை அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது.

ரசிகர்கள் கவலை

ரசிகர்கள் கவலை

இதேபோன்று தற்போதும் அவர் காயம் காரணமாக இந்திய அணியில் இருந்து விலகி ஓய்வில் இருந்தார். சென்னை அணியின் தொடக்க வீரர் ருத்ராஜ் கெய்க்வாட் காயம் காரணமாக இந்திய அணியில் இருந்து விலகினார். மேலும் சென்னை அணியில் உள்ள வேக பந்துவீச்சாளர் ஜெமிசனும் காயம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து விலகி உள்ளார். இதனால் இம்முறையும் சென்னை அணி என்ன செய்யப் போகிறது என ரசிகர்கள் கவலையில் இருந்தனர்.

பலம் அதிகரிப்பு

பலம் அதிகரிப்பு

தற்போது அவர்களுக்கு மகிழ்ச்சி தரும் விஷயமாக தீபக்சாகர் மற்றும் ருத்துராஜ் கெய்க்வாட் ஆகிய இருவரும் தங்களது முழு உடல் தகுதியை எட்டி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் சென்னை அணி ரசிகர்கள் பயப்பட தேவை இல்லை. தொடக்க வீரராக ருத்ராஜ் கெய்க்வாடும் ஆல்ரவுண்டஎ வேகப்பந்துவீச்சாளராக தீபக்சாகரும் அணியில் இடம் பெறுவதன் மூலம் சென்னை அணியின் பலம் வெகுவாக அதிகரிக்கும்.

இனி கலக்கல் தான்

இனி கலக்கல் தான்

இதேபோன்று கடந்த சீசனில் ஜடேஜா காயம் காரணமாக பாதியில் வெளியேறிய நிலையில் தற்போது அவரும் சூப்பர் பார்மில் இந்த தொடரில் விளையாடுகிறார். பற்றாக்குறைக்கு ஸ்டோக்ஸ் , அம்பத்தி ராயுடு, மொயின் அலி போன்ற வீரர்களும் உள்ளனர். இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் வாய்ந்த அணியாக கருதப்படுகிறது. இதனால் ஐந்தாவது முறையாக கோப்பையை சூப்பர் கிங்ஸ் வெல்லும் என ரசிகர்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

Story first published: Tuesday, February 21, 2023, 22:07 [IST]
Other articles published on Feb 21, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+