ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட்.. இந்திய அணியின் பிளேயிங் வெலன்.. 2 இடத்திற்கு குழப்பம்
இந்தூர் ஆடுகளம் பேட்டிங் மற்றும் சுழற்பந்துவீச்சு என இரண்டிற்கும் சரி சமமான அளவில் சாதகமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்திய அணி வெற்றி பெற்றாலும், குறைகள் இல்லாமல் இல்லை.
இந்திய அணி ஏற்கனவே தொடரை 2க்கு0 என்று முன்னிலை பெற்றுள்ள நிலையில், தொடரை சமன் செய்ய ஆஸ்திரேலிய அணி போராடும். எனினும் இந்திய அணி குறைந்தது 1 டெஸ்டில் வென்றால் கூட உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுவிடும்.
இந்தூர் ஆடுகளம் பேட்டிங் மற்றும் சுழற்பந்துவீச்சு என இரண்டிற்கும் சரி சமமான அளவில் சாதகமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்திய அணி வெற்றி பெற்றாலும், குறைகள் இல்லாமல் இல்லை.

இந்தியாவின் குறை
இந்திய அணியில் ரோகித், அஸ்வின், ஜடேஜா, அக்சர் பட்டேலை தவிர மற்ற யாரும் பெரிய அளவில் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. இந்த 4 வீரர்களின் அபார ஆட்டத்தால் தான் இந்தியா வென்றது. விராட் கோலி, புஜாரா ஆகியோர் பார்ம்க்கு வந்ததற்கான சமிக்கைகள் தெரிந்த போதிலும், 3வது டெஸ்டில் பெரிய ஸ்கோர் அடிக்க வேண்டிய நெருக்கடியில் உள்ளனர்.

பந்துவீச்சு
இந்திய அணியின் பந்துவீச்சை பொறுத்தவரை எந்த பெரிய மாற்றமும் இருக்காது. அஸ்வின், ஜடேஜா மற்றும் அக்சர் பட்டேல் என 3 வீரர்கள் மட்டுமே மீண்டும் களமிறங்குவார்கள். குல்தீப் யாதவ் தனது வாய்ப்புக்காக காத்திருக்க வேண்டும். வேகப்பந்துவீச்சில் முகமது சிராஜ் மற்றும் முகமது ஷமி ஆகியோர் களமிறங்குவார்கள்.

குழப்பம்
இந்திய அணியின் தற்போது முக்கிய பிரச்சினையே ரோகித் சர்மாவுக்கு ஜோடி யார் என்பது தான். கேஎல் ராகுல் தொடர்ந்து மோசமாக விளையாடி வருவதால், அவரை நீக்கவிட்டு சுப்மன் கில்லுக்கு வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே போன்று ஸ்ரேயாஸ் ஐயரும் தனது பேட்டிங் திறமையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.

பிளேயிங் லெவன்
1, ரோகித் சர்மா, 2, கேஎல் ராகுல் / சுப்மன் கில், 3,புஜாரா, 4, விராட் கோலி, 5, ஸ்ரேயாஸ் ஐயர், 6, கேஎஸ் பரத், 7, ஜடேஜா, 8, அஸ்வின், 9,அக்சர் பட்டேல், 10, முகமது சிராஜ், 11, முகமது ஷமி


Click it and Unblock the Notifications