For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

2 வீரர்களுக்கு மட்டும் ஸ்பெஷல் பயிற்சி.. ஜிம்பாப்வே தொடரில் கூடுதல் பொறுப்பு.. என்ன காரணம் தெரியுமா

ஹராரே: ஜிம்பாப்வே தொடரில் இரண்டு இந்திய வீரர்கள் மட்டும் நீண்ட நேரமாக களத்திலேயே தீவிர பயிற்சி மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Recommended Video

IND vs ZIM Shikhar Dhawan இந்திய வீரர்களுக்கு எச்சரிக்கை *Cricket

ஜிம்பாப்வேவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

இந்த போட்டிகள் வரும் ஆகஸ்ட் 18, 20 மற்றும் 22ம் தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அணி

இந்திய அணி

இந்த ஒருநாள் கிரிக்கெட் தொடருக்காக ஒரு வாரத்திற்கு முன்னதாகவே ஜிம்பாப்வே தலைநகர் ஹராரேவுக்கு சென்ற இந்திய வீரர்கள், அங்கு தீவிர வலைபயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ராகுல் டிராவிட் ஆசிய கோப்பை தொடருக்கான பணிகளில் இருப்பதால், இந்த தொடருக்கு வி.வி.எஸ். லக்‌ஷ்மண் தலைமை பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார்.

ஸ்பெஷல் ட்ரெய்னிங்

ஸ்பெஷல் ட்ரெய்னிங்

இந்நிலையில், இரண்டு வீரர்களுக்கு மட்டும் ஸ்பெஷல் பயிற்சி வழங்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கேப்டன் கே.எல்.ராகுல் மற்றும் தீபக் சஹார் ஆகிய இருவரும் தான் அது. இருவரும் தாமதமாக ஹராரேவுக்கு சென்ற சூழலில் தினமும் ஒதுக்கப்பட்ட நேரத்தை விட, இவர்கள் இருவருமே அதிக நேரம் வலைபயிற்சியில் ஈடுபடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

என்ன காரணம்

என்ன காரணம்

கே.எல்.ராகுல் மற்றும் தீபக் சஹார் ஆகியோர் காயத்தால் பாதிக்கப்பட்டு நீண்ட நாட்களாக கிரிக்கெட் விளையாடாமல் இருந்தனர். எனினும் இவர்களின் பெயர்கள் ஆசிய கோப்பைக்கு சேர்க்கப்பட்டுள்ளது. எனவே இந்த தொடரின் மூலம் கம்பேக் கொடுக்க வேண்டிய கட்டாயத்தால், இருவருமே அதி தீவிரமாக பயிற்சி பெற்று வருகின்றனர்.

இக்கட்டான நிலை

இக்கட்டான நிலை

கே.எல்.ராகுல் ஒருவேளை ஜிம்பாப்வே தொடரில் சிறப்பாக விளையாடி தனது உடற்தகுதியை நிரூபிக்காவிட்டால், ஆசிய கோப்பைக்கான அணியில் இருந்து நீக்கப்பட வாய்ப்புள்ளது. அவரின் இடத்தை நிரப்புவதற்காக முழு உடற்தகுதியுடன் ஸ்ரேயாஸ் ஐயர் காத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Tuesday, August 16, 2022, 20:15 [IST]
Other articles published on Aug 16, 2022
English summary
India vs zimbabwe ODI series ( இந்தியா vs ஜிம்பாப்வே தொடர் ) ஜிம்பாப்வே அணிக்கு எதிரான தொடரில் இரண்டு இந்திய வீரர்களுக்கு மட்டும் ஸ்பெஷல் பயிற்சி அளிக்கப்பட்டு வருகின்றனர்.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+