ஐபிஎல் ரசிகர்களுக்கு நற்செய்தி.. உள்ளே வரும் 2 அட்டகாச வீரர்கள்.. வாங்குவதற்கு முட்டி மோதும் அணிகள்!
மும்பை: ஐபிஎல் அணிகளுக்கு பெரும் மகிழ்ச்சி தரும் வகையில் இங்கிலாந்து கிரிக்கெட்டில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்ததை அடுத்து ரசிகர்கள் அனைவரின் பார்வையும் ஐபிஎல் 2023ம் ஆண்டு தொடரின் மீது திரும்பியுள்ளது.
அடுத்தாண்டு ஐபிஎல் தொடருக்கான வீரர்களின் மினி ஏலம் வரும் டிசம்பர் 23ம் தேதியன்று நடைபெறவுள்ளது. கேரள மாநிலம் கொச்சி நகரில் இந்த ஏலம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் மினி ஏலம்
ஐபிஎல் மினி ஏலம் என்பதால் ஒவ்வொரு அணியும் எந்தெந்த வீரர்களை தக்கவைக்கப் போகிறார்கள் என்ற பட்டியலை இன்றுக்குள் சமர்பிக்க வேண்டும் என பிசிசிஐ அறிவுறுத்தியிருந்தது. அதன்படி ஒவ்வொரு அணியும் தாங்கள் விடுவிக்கும் வீரர்களை தேர்ந்தெடுத்து அறிவித்து வருகின்றன.

மகிழ்ச்சியான செய்தி
இந்நிலையில் அவர்களுக்கு ஆச்சரியத்தை கொடுத்துள்ளது இங்கிலாந்து அணி. அதாவது இங்கிலாந்து அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டரான பென் ஸ்டோக்ஸ், சாம் கரண் உள்ளிட்ட வீரர்கள் அடுத்தாண்டு ஐபிஎல்-க்கு இருப்பார்கள் என தகவல் வெளியாகியுள்ளது. கடந்தாண்டு பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த இரண்டு வீரர்களுமே மெகா ஏலத்தில் பங்கேற்கவில்லை.

ஓராண்டு ஓய்வு
ராஜஸ்தான் அணிக்காக விளையாடி வந்த பென் ஸ்டோக்ஸ் மெகா ஏலத்தின் போது கழட்டிவிடப்பட்டார். அதன்பின்னர் மன அழுத்தம் எனக்கூறி நீண்ட ஓய்வு சென்றிருந்தார். சாம் கரண் உள்ளிட்ட வீரர்களும் நாட்டிற்காக விளையாட சென்றிருந்தனர். ஆனால் அடுத்தாண்டு 50ஓவர் உலகக்கோப்பை இருப்பதால் இங்கிலாந்துக்கு பெரியளவில் டி20 போட்டிகள் இருக்காது.

சிறப்பான ஃபார்ம்
பென் ஸ்டோக்ஸ் மற்றும் சாம் கரண் ஆகிய இருவருமே அட்டகாசமான ஃபார்மில் இருக்கும் ஆல்ரவுண்டர்கள் ஆகும். நடந்துமுடிந்த டி20 உலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்துக்கு கோப்பை வென்றுக்கொடுத்தவர் பென் ஸ்டோக்ஸ். இதே போல தொடர் முழுவதும் விக்கெட் மழை பொழிந்தவர் சாம் கரண் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications