Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பிரசித் கிருஷ்ணா அதிரடி...அடுத்தடுத்த விக்கெட்டுகள்... 3வது விக்கெட் மிஸ்!

புனே : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான முதல் ஒருநாள் போட்டி புனேயில் நடைபெற்று வருகிறது.

இதில் பௌலர் பிரசித் கிருஷ்ணா அறிமுக வீரராக களமிறங்கி சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தினார்.

மேலும் அடுத்தடுத்த ஓவர்களில் அடுத்தடுத்து இங்கிலாந்தின் முக்கிய விக்கெட்டுகளான ஜேசன் ராய் மற்றும் பென் ஸ்டோக்ஸ் விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

ஒருநாள் போட்டி

ஒருநாள் போட்டி

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான முதல் ஒருநாள் போட்டி துவங்கி நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 318 ரன்களை இங்கிலாந்துக்கு இலக்காக கொடுத்துள்ளது. இதையடுத்து தற்போது இங்கிலாந்து அணி தனது இன்னிங்சை ஆடி வருகிறது.

அதிரடி பார்ட்னர்ஷிப்

அதிரடி பார்ட்னர்ஷிப்

துவக்க வீரர்களாக களமிறங்கிய இங்கிலாந்தின் ஜேசன் ராய் மற்றும் பேர்ஸ்டோ அதிரடி பார்ட்னர்ஷிப்பை அமைத்து ரன்களை குவித்தனர். இதையடுத்து இங்கிலாந்துக்கு சாதகமாக போட்டி மாறியது. இந்நிலையில் பௌலிங் செய்த பிரசித் கிருஷ்ணா இந்த பார்ட்னர்ஷிப்பை உடைத்தார்.

3வது விக்கெட் மிஸ்

3வது விக்கெட் மிஸ்

இந்த போட்டியின்மூலம் அறிமுக வீரராக களமிறங்கிய பிரசித் கிருஷ்ணா ஆரம்பத்தில் ரன்களை கொடுத்த போதிலும் அடுத்தடுத்த ஓவர்களில் ரன்களை சுருக்கினார். 6 ஓவர்களில் 46 ரன்களை மட்டுமே கொடுத்துள்ளார். தொடர்ந்து 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். 3வது விக்கெட்டை எடுக்க இவர் முயற்சித்த போது கேப்டன் கோலி கேட்சை மிஸ் செய்தார்.

முக்கியமான விக்கெட்

முக்கியமான விக்கெட்

முக்கியமான துவக்க பார்ட்னர்ஷிப்பை ஜேசன் ராய் விக்கெட்டை வீழ்த்தியதன்மூலம் உடைத்தார் பிரசித். மேலும் பென் ஸ்டோக்ஸ் விக்கெட்டையும் வீழ்த்தினார். இதன்மூலம் இங்கிலாந்துக்கு சாதகமான இந்த போட்டியின் போக்கு இந்தியாவிற்கு சாதகமாக மாறியது. ஷர்துல் தாக்கூரும் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்தியாவிற்கு சாதகமாக போட்டியை மாற்றியுள்ளார்.

Story first published: Tuesday, March 23, 2021, 21:16 [IST]
Other articles published on Mar 23, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+