Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

200 டெஸ்ட் ஆடுவது 'அமேஸிங்' சச்சின்... போலாக் வியப்பு!

200 Tests by Sachin is amazing achievement: Pollock
டெல்லி: சச்சின் டெண்டுல்கர் 200 டெஸ்ட் போட்டிகளை ஆடியிருப்பது பெரும் சாதனை, ஆச்சரியமான ஒன்று என்று முன்னாள் தென் ஆப்பிரிக்க ஆல் ரவுண்டர் ஷான் போலாக் கூறியுள்ளார்.

சச்சினுக்குப் புகழாரம் சூட்டி அவர் பேசுகையில், தன் மீதான எதிர்பார்ப்புகளை சரியாக நிறைவேற்றி தன்னைத் தானே செதுக்கிக் கொண்டு சிறப்பாக ஆடியவர் சச்சின்.

இந்தியாவில், ரசிகர்கள் தன் மீது வைத்துள்ள நம்பிக்கை மற்றும் எதிர்பார்ப்புகளை சரியாக புரிந்து வைத்துக் கொண்டு ஆடியவர் அவர்.

மற்ற வீரர்களை விட விதி விலக்கானவர் சச்சின். 200 டெஸ்ட் போட்டிகளை ஆடுவது என்பது மலைப்புக்குரியது, வியப்புக்குரியது. அதை நிகழ்த்தி ஆச்சரியப்படுத்தியுள்ளார் சச்சின். மிகப் பெரிய சாதனை இது.

சிலர் விளையாடுவதைப் பார்க்க மகிழ்ச்சியாக இருக்கும். அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான் சச்சின். அவருக்கு எதிராக விளையாடிய நிகழ்வுகள் எனக்கு பொக்கிஷம் போல. விளையாட்டின் உண்மையான தூதர் சச்சின் டெண்டுல்கர்.

200வது போட்டியில் அவர் சிறப்பாக விளையாட வாழ்த்துகிறேன். சிறந்த முறையில் தனது கடைசி போட்டியை அவர் முடிக்க விரும்புகிறேன் என்றார் போலாக்.

Story first published: Thursday, November 14, 2013, 15:09 [IST]
Other articles published on Nov 14, 2013
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+