Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இன்னிக்கு ஜெயிச்சுட்டோம்.. 2007ல் வங்கதேசத்திடம் தோற்றதை இன்னும் மறக்க முடியவில்லை.. டோணி

பெங்களூரு: வங்கதேசத்தை ஒரு ரன் வித்தியாசத்தில் நாம் வீழ்த்தியிருந்தாலும், 2007 உலகக் கோப்பைப் போட்டியில் அந்த அணியிடம் பெற்ற தோல்வியை என்னால் இன்னும் மறக்க முடியவில்லை என்று கேப்டன் டோணி கூறியுள்ளார்.

இப்போது வென்றதை விட அந்த தோல்விதான் இன்னும் எனது மனதை விட்டு அகலாமல் உள்ளது. அந்தத் தோல்வியை இந்த வெற்றியால் மறக்கடிக்க முடியவில்லை என்றும் டோணி கூறியுள்ளார்.

2007ல் நடந்த உலகக் கோப்பை ஒரு நாள் போட்டித் தொடரில் குரூப் பிரிவில் இந்தியாவை வங்கதேசம் 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. அந்தத் தொடரில் லீக் சுற்றோடு இந்தியா வெளியேற்றப்பட்டது நினைவிருக்கலாம் . 3 போட்டிகளில் ஆடிய இந்தியா பெர்முடாவை மட்டுமே வெல்ல முடிந்தது. இலங்கை, வங்கதேசத்திடம் தோல்வியைத் தழுவியது.

மறக்க முடியவில்லை

மறக்க முடியவில்லை

நேற்று வங்கதேசத்தை ஒரு ரன்னில் வென்றதன் மூலம், அந்தத் தோல்வியை மறக்க முடிந்ததா என்று செய்தியாளர்கள் டோணியிடம் கேட்டனர். அதற்கு அவர் பதிலளிக்கையில், எந்த வெற்றியாலும் அந்தத் தோல்வியை மறக்க முடியாது.

முன்னேற முடியாமல் போனது வேதனை

முன்னேற முடியாமல் போனது வேதனை

அப்போது நாம் நன்றாகத்தான் ஆடினோம். ஆனால் நம்மால் லீக் சுற்றோடு வெளியேற வேண்டியதாகி விட்டது. அதற்கு மேல் போக முடியாமல் போனது வேதனை. எனவே அந்த தோல்வியை என்னால் மறக்க முடியாது என்றார் டோணி.

முதல் உலகக் கோப்பை

முதல் உலகக் கோப்பை

உண்மையில் அது டோணிக்கு முதல் உலகக் கோப்பைப் போட்டியாகும். ராகுல் டிராவிட் கேப்டனாக இருந்தார். டோணி அப்போட்டியில் டக் அவுட் ஆனார்.

தவறு இயல்புதான்

தவறு இயல்புதான்

டோணி மேலும் கூறுகையில், நாமெல்லாம் மனிதர்கள். தவறு செய்வது இயல்புதான். அதேசமயம், தோல்வின் வலியை நம்மால் அவ்வளவு சீக்கிரம் மறக்க முடியாது. நன்றாக விளையாடாவிட்டால் நிச்சயம் அது வேதனை தரும்.

2011ல் பட்டையைக் கிளப்பினோம்

2011ல் பட்டையைக் கிளப்பினோம்

2007 தொடரில் இந்திய சொதப்பினாலும் கூட அடுத்து நடந்த 2011 தொடரில் இந்தியா பிரித்து மேய்ந்து கோப்பையை வென்றது.. டோணி தலைமையில்.

Story first published: Thursday, March 24, 2016, 12:38 [IST]
Other articles published on Mar 24, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+