For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

என்னங்க 2011 மாதிரியே நடக்குது.. அரையிறுதியிலும் அதே 3 அணிகள்.. தோனி சொன்ன ஒரியோ மேஜிக் நடக்குதோ?

மெல்போர்ன்: 2022 டி20 உலககோப்பை கிரிக்கெட் தொடரில் நடைபெறும் சம்பவங்களும், 2011 ஆம் ஆண்டு உலககோப்பை கிரிக்கெட் தொடரில் நடந்த சம்பவங்களும் ஒரே மாதிரியாக இருப்பதாக ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

இதற்கு காரணம் தோனியின் ஒரு விளம்பரம் தான் என்று சொன்னால், உங்களால் நம்ப முடிகிறதா? டி20 உலககோப்பைக்கு முன் தோனி ஒரு விளம்பரத்தில் நடித்தார்.

அதில் இம்முறை இந்தியா உலககோப்பையை வெல்லும். அதற்கு காரணம் 2011 ஆம் ஆண்டு ஓரியோ பிஸ்கெட் அறிமுகப்படுத்தப்பட்ட போது இந்தியா உலககோப்பையை வென்றது.

டி20 உலககோப்பை - வெளியேறியது தென்னாப்பிரிக்க அணி.. நெதர்லாந்து கொடுத்த ஷாக்.. அரையிறுதியில் இந்தியாடி20 உலககோப்பை - வெளியேறியது தென்னாப்பிரிக்க அணி.. நெதர்லாந்து கொடுத்த ஷாக்.. அரையிறுதியில் இந்தியா

தோனி விளம்பரம்

தோனி விளம்பரம்

இதனால் இம்முறை மீண்டும் ஓரியோ பிஸ்கெட் அறிமுகப்படுத்தப்படுவதால், இந்தியா உலககோப்பையை வெல்லும் என்பது போல் அந்த விளம்பரம் அமைக்கப்பட்டது. முதலில் இந்த விளம்பரம் குறித்து கண்ணாடியை திருப்பினால் எப்படி ஜீவா ஆட்டோ ஓடும் என்று அஜீத் காமெடியை போட்டு விமர்சித்தனர்.

இந்தியாவின் தோல்வி

இந்தியாவின் தோல்வி

ஆனால், அந்த விளம்பரத்தில் சொன்னது போல் இரு உலககோப்பையில் நடைபெறும் சம்பவங்களுக்கும் ஒற்று போனதை ரசிகர்களாலே தற்போது நம்ப முடியவில்லை. 2011ஆம் ஆண்டு உலககோப்பையில் இந்திய அணி தென்னாப்பிரிக்காவிடம் தோல்வியை தழுவியது. அதே போல் இம்முறையும் இந்தியா தென்னாப்பிரிக்காவிடம் வீழ்ந்தது.

மற்ற அணிகளின் தோல்வி

மற்ற அணிகளின் தோல்வி

2011 உலககோப்பையில் அயர்லாந்திடம் இங்கிலாந்து தோல்வியை தழுவியது. தற்போது அதே போல், அயர்லாந்திடம் இங்கிலாந்து தோற்றது. 2011 உலககோப்பை அரையிறுதியில் ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்க அணிகள் இடம்பெறவில்லை. இதே போன்று நடப்பு டி20 உலககோப்பையிலும் அரையிறுதியில் ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்க அணிகள் தகுதி பெறவில்லை.

அரையிறுதி அணிகள்

அரையிறுதி அணிகள்

இதே போன்று 2011 அரையிறுதியில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகள் தகுதி பெற்றன. தற்போதும், அதே மாதிரி இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகள் தகுதி பெற்றுள்ளன. 4வது அணியாக இலங்கைக்கு பதில் இங்கிலாந்து வந்துள்ளது. இதே போன்று அப்போதைய கேப்டன் தோனி, இறுதிப் போட்டிக்கு முன்பு வரை சரியாக விளையாடவில்லை. இதே மாதிரி ரோகித் நெதர்லாந்துக்கு எதிராக தவிர மற்ற அணிகளுக்கு எதிராக சொதப்பி வருகிறார். இதனால், எல்லா சம்பவங்களும் ஒரே மாதிரி நடப்பதால், இந்தியா உலககோப்பையை மீண்டும் வெல்லும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Story first published: Sunday, November 6, 2022, 15:01 [IST]
Other articles published on Nov 6, 2022
English summary
2011 and 2022 Both ICC World cup have similarities as per fans theory
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X