
பரபரப்பு
முதன் முறையாக இந்த புகாரில் அந்தப் போட்டியில் ஆடிய வீரர் ஒருவர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதால் பரபரப்பு எழுந்தது. அரவிந்தா டி சில்வாவிடம் ஆறு மணி நேரம் விசாரித்த காவல்துரயினறம் உபுல் தரங்காவிடம் இரண்டு மணி நேரம் விசாரணை செய்துள்ளனர்.

உலகக்கோப்பை இறுதிப் போட்டி
2011 உலகக்கோப்பை இறுதிப் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. அந்தப் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று உலகக்கோப்பையை வென்று இருந்தது. அந்தப் போட்டி நடத்து 9 ஆண்டுகள் ஆகிறது.

விற்று விட்டனர்
அந்த இறுதிப் போட்டியில் மேட்ச் பிக்ஸிங் நடந்ததாக 9 ஆண்டுகள் கழித்து சமீபத்தில் புகார் கூறினார் அப்போதைய விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த மஹிந்தானந்த அலுத்கமகே. இலங்கை உலகக்கோப்பை இறுதிப் போட்டியை விற்று விட்டதாக அவர் கூறி அதிர்ச்சி அளித்தார்.

குழப்பம்
அதை அடுத்தே இலங்கை அரசு அது குறித்து காவல்துறை விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. மஹிந்தானந்த அலுத்கமகே முதலில் விசாரிக்கப்பட்டார். அவர் அந்த விசாரணைக்கு பின் தான் மேட்ச் பிக்ஸிங் நடந்ததாக சந்தேகப்பட்டதாகவும், அதை விசாரிக்க வேண்டும் எனவும் கூறி குழப்பத்தை ஏற்படுத்தினார்.

அரவிந்தா டி சில்வா
அவரை அடுத்து அப்போதைய தேர்வுக் குழு தலைவர் அரவிந்தா டி சில்வா விசாரிக்கப்பட்டார். இறுதிப் போட்டியில் இலங்கை கிரிக்கெட் போர்டு அதிகாரிகளுக்கு தெரிவிக்காமல் கடைசி நேரத்தில் நான்கு வீரர்கள் மாற்றப்பட்டதாக கூறப்பட்ட நிலையில் டி சில்வாவிடம் விசாரணை செய்யப்பட்டது.

20 பந்துகளில் 2 ரன்கள்
அரவிந்தா டி சில்வாவிடம் ஆறு மணி நேரம் விசாரணை நடந்தது. அதன் முடிவில், 2011 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இலங்கை அணியின் துவக்க வீரராக ஆடிய உபுல் தரங்கா விசாரணைக்கு அழைக்கப்பட்டார். உபுல் தரங்கா அந்த போட்டியில் 20 பந்துகளில் 2 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்து இருந்தார்.

நிதான ஆட்டம்
அவர் நிதான ஆட்டம் ஆடியதால், அந்த சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை நடப்பதாக பரபரப்பு எழுந்தது. மஹிந்தானந்த அலுத்கமகே மற்றும் அரவிந்தா டி சில்வாவிடம் விசாரணை நடந்த பின் உபுல் தரங்கா அழைக்கப்பட்டுள்ளதால் ஏதேனும் ஆதாரத்தின் அடிப்படையில் அவர் விசாரிக்கப்படுகிறாரா? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

விசாரணை வளையத்தில் வீரர்கள்
முன்னதாக முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே கூறுகையில் இந்த மேட்ச் பிக்ஸிங்கில் வீரர்களுக்கு தொடர்பு இல்லை, சில குழுக்கள் ஈடுபட்டு இருக்கலாம் என்றார். ஆனால், தற்போது உபுல் தரங்காவை விசாரித்துள்ளது காவல்துறை.

சங்ககாரா - ஜெயவர்தனே
அவரைத் தொடர்ந்து இலங்கை அணியின் அப்போதைய கேப்டன் குமார் சங்ககாரா மற்றும் துணை கேப்டன் மகிளா ஜெயவர்தனே விசாரிக்கப்பட உள்ளனர். இலங்கை கிரிக்கெட் வட்டாரத்தில் இந்த விவகாரம் புயலை கிளப்பி உள்ளது.


Click it and Unblock the Notifications











