Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

2011 உலகக் கோப்பை போட்டியின்போது ஒரே பாட்டை 7 நாட்கள் திரும்பத் திரும்ப கேட்ட சச்சின்

மும்பை: கடந்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்களின்போது தான் 7 நாட்களாக ஒரே இந்தி பாடலை திரும்பத் திரும்ப கேட்டதாக முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.

1983ம் ஆண்டுக்கு பிறகு இந்தியாவுக்கு எட்டாகனியாக இருந்த கிரிக்கெட் உலகக் கோப்பை கடந்த 2011ம் ஆண்டு தான் கிடைத்தது. மும்பை வாங்கடே மைதானத்தில் நடந்த இறுதிப் போட்டியில் டோணி தலைமையிலான இந்திய அணி இலங்கையை வீழ்த்தி கோப்பையை வென்றது.

இந்நிலையில் இது குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் கூறுகையில்,

ஒரே பாட்டு

ஒரே பாட்டு

கடந்த உலகக் கோப்பை கிரிக்கெட் சீசனில் பாகிஸ்தானுக்கு எதிரான அரையிறுதிப் போட்டிக்கு முந்தைய நாளில் இருந்து மும்பையில் நடந்த இறுதிப் போட்டி வரை தொடர்ந்து 7 நாட்களுக்கு நான் ஒரே பாடலை திரும்பத் திரும்ப கேட்டுக் கொண்டிருந்தேன்.

படே அச்சே லக்தே ஹைன்

படே அச்சே லக்தே ஹைன்

பாலிகா பது என்ற படத்திற்காக அமித் குமார் பாடிய படே அச்சே லக்தே ஹைன் பாடலைத் தான் நான் 7 நாட்களாக கேட்டேன்.

பாடல்

பாடல்

அச்சே லக்தே பாடலை யாராவது வைத்திருக்கிறீர்களா என்று பேருந்தில் ஏறியதும் வீரர்களிடம் கேட்டேன். அந்த பாடலை எங்களுக்கு மசாஜ் செய்யும் மானே அண்ணன் வைத்திருந்தார்.

மூடநம்பிக்கையா?

மூடநம்பிக்கையா?

விளையாட்டு வீரர்களுக்கு நிறைய மூடநம்பிக்கைகள் உள்ளது. அத்தகைய மூடநம்பிக்கையால் அந்த பாடலை திரும்பத் திரும்ப கேட்டாரா என்று சச்சின் தெரிவிக்கவில்லை.

6 உலகக் கோப்பைகள்

6 உலகக் கோப்பைகள்

சச்சின் 6 முறை உலகக் கோப்பை போட்டிகளில் விளையாடியுள்ளார். அவர் முதன்முதலாக 1992ம் ஆண்டு உலகக் கோப்பை போட்டியில் கலந்து கொண்டார். கடைசியாக 2011ம் ஆண்டு போட்டியில் கலந்து கொண்டார்.

ரன்கள்

ரன்கள்

உலகக் கோப்பை வரலாற்றில் அதிகபட்சமாக 2 ஆயிரத்து 278 ரன்கள் எடுத்து சாதனை புரிந்ததும் சச்சின் தான். அதில் 6 சென்ச்சுரிகளும் அடக்கம்.

Story first published: Friday, February 6, 2015, 16:17 [IST]
Other articles published on Feb 6, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+