2011 உலக கோப்பையை இந்தியா வென்ற உடன், தோனியின் தந்தை என்ன சொன்னார் தெரியுமா? கேட்டா நம்ப மாட்டீங்க
மும்பை : 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை தோனி தலைமையிலான இந்திய அணி வென்று இன்றுடன் 13 ஆண்டுகள் நிறைவு பெற்றிருக்கிறது. இந்திய அணி கபில்தேவ் தலைமையில் முதல் முறையாக 1983 ஆம் ஆண்டு உலக கோப்பையை வென்றது.
அதன் பிறகு 28 ஆண்டுகள் இரண்டாவது உலகக் கோப்பை காக ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களும் காத்துக் கொண்டிருந்தனர். சச்சின் வாங்கி தர மாட்டாரா? கங்குலி வாங்கி தர மாட்டாரா? டிராவிட் வாங்கி தர மாட்டாரா என்று ஒவ்வொரு ரசிகர்களும் பல உலக கோப்பையில் ஏங்கிக் கொண்டிருந்தனர்.

கடைசியாக தோனி கேப்டனாக இருந்த போதுதான் இந்தியா உலக கோப்பையை வென்றது. தற்போது இந்த 13 ஆண்டுகளில் இந்தியா எந்த உலகக் கோப்பையும் வெல்லவில்லை. இந்நிலையில் இந்த 13வது ஆண்டு நிகழ்வைக் கொண்டாடும் ரசிகர்கள் வரும் ஜூன் மாதம் நடைபெற உள்ள டி20 உலக கோப்பையை இந்தியா வெல்ல வேண்டும் என்று நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.
இந்த நிலையில் 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை இந்தியா வென்றவுடன் தோனியின் தந்தை பான் சிங் தோனி, என்ன சொன்னார் என்று நீங்கள் தற்போது கேட்டால் ஷாக் ஆகிவிடுவீர்கள். உலகக்கோப்பை வாங்கியவுடன் தோனியின் வீட்டு முன்பு ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டு வான வேடிக்கை வெடித்தனர். இரவு முழுவதும் தோனியின் வீட்டு முன்பே நின்று ரசிகர்கள் கொண்டாடினர்.
ஆனால் தோனியின் தந்தை இதற்கெல்லாம் சந்தோஷப்படவே இல்லை. இதற்கு மாறாக அவர் திட்டினார் காரணம் தோனியின் தந்தை மனதில் ஆறாத ஒரு வடு இருந்தது. அதாவது 2007 ஆம் ஆண்டு உலக கோப்பையை இந்தியா வெல்லும் என்று ரசிகர்கள் அனைவரும் நம்பினர். ஏனென்றால் அந்த அணியில் டிராவிட், சச்சின், கங்குலி, சேவாக், யுவராஜ் சிங், தோனி, ராபின் உத்தப்பா,ஜாகீர் கான், ஹர்பஜன் சிங், கும்பளே போன்ற ஜாம்பவான் வீரர்கள் இருந்தனர்.
இதனால் இந்தியாவுக்கு தான் உலகக்கோப்பை என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், இந்திய அணி வங்கதேசம் மற்றும் இலங்கை அணி இடம் தோற்று முதல் சுற்றிலேயே தொடரை விட்டு வெளியேறியது. இதனை ஏற்றுக் கொள்ள முடியாத ரசிகர்கள் பலரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தோனி சொந்த ஊரான ராஞ்சியில் ஒரு வீடு கட்டிக் கொண்டு இருந்தார்.
தோனி வீட்டில் இல்லாத நிலையில் அங்கு சூழ்ந்த ரசிகர்கள் தோனி கட்டிக் கொண்டிருந்த வீட்டின் மீது தாக்குதல் நடத்தினர். இது தோனியின் தந்தைக்கு மிகப்பெரிய காயத்தை ஏற்படுத்தியது. அப்போது 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பை வென்ற பிறகு பேசிய தோனியின் தந்தை பான் சிங், விளையாட்டில் வெற்றி தோல்வி என்பதெல்லாம் சகஜம். இன்று உலக கோப்பையை என் மகன் வென்று விட்டார் என்று கூறி ரசிகர்கள் வீட்டின் முன் கொண்டாடி வருகிறீர்கள்.
ஆனால் இதே ரசிகர்கள் தான் 2007 ஆம் ஆண்டு உலக கோப்பையை இந்தியா தோற்றத்திற்காக எங்கள் வீட்டு முன் தாக்குதல் நடத்தினார்கள். அப்போது ஏற்பட்ட காயம் இன்னும் என் மனதில் இருந்து செல்லவில்லை. ரசிகர்கள் விளையாட்டை விளையாட்டாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுரை கூறியிருந்தார்.


Click it and Unblock the Notifications