"ப்ளூ" சட்டைக்காரங்களை சும்மா விடக்கூடாது... இந்தியாவை சமாளிக்க முஸ்தீபுகளில் குதித்த வங்கதேசம்!
மெல்போர்ன்: உலக கோப்பையில், வங்கதேசம் முதல்முறையாக நாக்அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இந்தியாவை காலிறுதியில் அந்த அணி சந்திக்க உள்ளது. இதற்காக தீவிர வலைப் பயிற்சியில் அந்த அணி வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இந்தியாவும், வங்கதேசமும், மார்ச் 19ல் உலக கோப்பை காலிறுதியில் பலப் பரிட்சை நடத்த உள்ளன.
2007 உலக கோப்பையில், வங்கதேசம் நம்மை வீழ்த்தியுள்ளது. அந்த தோல்வி எதிரொலியால், இந்தியா, உலக கோப்பையைவிட்டு முதல் ரவுண்டிலேயே வெளியேற வேண்டிய சூழ்நிலை வந்தது.
அதேபோல, 2012 ஆசிய கோப்பையிலும், இந்தியாவை, வங்கதேசம் தோற்கடித்துள்ளது. எனவே வங்கதேசத்தை குறைத்தை எடை போட முடியாது. இந்நிலையில்தான், வங்கதேசம் தகுதியின் மூலமே, காலிறுதிக்கு முன்னேறியுள்ளது என்று அந்த அணியின் கோச் கூறியுள்ளார்.
மெல்போர்னில், வங்கதேச வீரர்கள் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
Story first published: Tuesday, March 17, 2015, 12:37 [IST]
Other articles published on Mar 17, 2015


Click it and Unblock the Notifications