மும்பை: 2015ஆம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் இந்தியா- பாகிஸ்தான் இடையேயான ஆட்டத்துக்கான டிக்கெட்டுகள் விற்றுதீர்ந்துவிட்டன.
2015ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டியில் ஆஸ்திரேலியாவின் அடிலெய்ஸ்டு ஓவல் மைதானத்தில் பிப்ரவரி 15-ந் தேதியன்று இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

இந்தப் போட்டிக்கான டிக்கெட்டுகள் முழுமையாக விற்று தீர்ந்துவிட்டன என்று போட்டி நிர்வாகிகளில் ஒருவரான ஜான் ஹார்ன்டென் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:
ஆஸ்திரேலியாவில் பல்வேறு நாட்டு மக்களும் வசித்து வருகின்றனர். இந்தியா- பாகிஸ்தான் போட்டி என்பது இறுதிப் போட்டியைப் போன்றது. தற்போதைய நிலையில் அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்துவிட்டன.
இவ்வாறு அவர் கூறினார்.